அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பிரபல இளம் ஜோதிடருடன்
ஸ்டாலின் மனைவி ஆலோசனை

சென்னை:பிரபல இளம் ஜோதிடர் பாலாஜி ஹாசனிடம், தன் கணவர் ஸ்டாலின், தமிழக முதல்வராகும் வாய்ப்பு உள்ளதா என, துர்கா, ஜோதிட ஆலோசனை கேட்ட தகவல், வெளியாகி உள்ளது.

இளம் ஜோதிடர், ஸ்டாலின், மனைவி, ஆலோசனை


சேலத்தை சேர்ந்த பிரபல இளம் ஜோதிடர், பாலாஜி ஹாசன். இவர், உலகளவில் நடந்த ஜோதிடர்கள் மாநாட்டில் பங்கேற்று, பல பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.




கடந்த ஓராண்டாக, பல விஷயங்களில், இவர் கூறும் கணிப்புகள் அனைத்தும், சரியாக

இருப்பதால், ஜோதிட பிரியர்களை, பெரிதும் கவர்ந்துள்ளார். பெரும்பாலான கணிப்புகள் பலித்து உள்ளதால், ஜோதிட துறையில், மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.



குறிப்பாக, 'ஆந்திராவில்,தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வர் பதவி ஏற்பார்' என, பாலாஜி ஹாசன் கணித்தது, அப்படியே பலித்தது. 'பிரதமர் மோடி தான் மீண்டும் பிரதமராவார்' என, அவர் கணித்ததும் உண்மையானது. அதே போல், தமிழகத்தில்,லோக்சபா தேர்தலில், தி.மு.க., நிறைய இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறியிருந்தார்; அதுவும்பலித்தது.




இந்நிலையில், ஜோதிடம் பார்ப்பதையும், கோவில் களுக்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, சமீபத்தில், பாலாஜி ஹாசனை, சென்னை

Advertisement

ஆழ்வார்பேட்டையில் உள்ள, தன் வீட்டிற்கு அழைத்து வந்து, ஜோதிட ஆலோசனை கேட்டு உள்ளார்.குடும்பத்தினரின் ஜாதகங்களை கொடுத்து, சாதக, பாதக அம்சங்களை கணித்து சொல்லும்படி கேட்டுள்ளார்.


அப்போது, ஜாதக பலன்படி, தமிழக முதல்வராக, ஸ்டாலின் பதவி ஏற்பார் என, பாலாஜி ஹாசன் கணித்து கூறியதால், துர்கா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanagaraj Easwaran - Aizawl,இந்தியா
24-ஜூலை-201915:03:49 IST Report Abuse

Kanagaraj Easwaranபாவிகளுக்கு தெய்வ தூஷணம் செய்பவர்களுக்கு ஜோதிடம் சொல்வதும் பாவமே. அப்படி சொன்னாலும் பலிக்காது. பலிக்காது. ஹரஹர மஹாதேவா ஹிந்துக்கள் வழிபடும் தெய்வங்கள் அவர்களது புனித நம்பிக்கைகளை இழிவாகப்பேசிய கருணா நிதி வாரிசுகளுக்கு நல்லகதி கிட்டவே கிட்டாது. ஹரஹர மஹாதேவா

Rate this:
வாசுதேவன் - சென்னை,இந்தியா
23-ஜூலை-201920:15:02 IST Report Abuse

வாசுதேவன்manjal thundu pottaal jeyikkalaamnu solli irupparo..?

Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜூலை-201913:02:05 IST Report Abuse

Yaro Oruvanதிராவிட கூத்தாடிகள் பேசும் பகுத்தறிவு பல்லிளிச்சி பல மாமாங்கம் ஆயிருச்சு.. பொழப்புக்காக கூவும் கும்பல் பகுத்தறிவு பேசும் கும்பல்..

Rate this:
மேலும் 120 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X