பதிவு செய்த நாள் :
கர்நாடகா, ம.ஜ.த., காங்., கூட்டணி ,அரசு ,இன்று கவிழும்?

பெங்களூரு: கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வர், குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது, இன்று நடக்க இருந்த ஒட்டெடுப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சி மீதான அதிருப்தியின் காரணமாக, 13 காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள், மூன்று, ம.த.ஜ.,- எம்.எல்.ஏ.,க்கள், அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்து, கடிதம் வழங்கினர். இவற்றை சபாநாயகர் ரமேஷ்குமார், அங்கீகரிக்கவோ, நிராகரிக்கவோ இல்லை.
இதையடுத்து, சபாநாயகர், வேண்டுமென்றே முடிவெடுக்காமல் தாமதப்படுத்துவதாக கூறி, காங்கிரஸ், எம்.எல்.ஏ., ராமலிங்க ரெட்டி தவிர, மீதி, 15 பேர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.மும்பைஇந்த வழிக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தங்களுக்கு சாதகமாக வந்துள்ளதாக அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் கருதுகின்றனர். இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்காமல், அவர்கள், மஹாராஷ்டிர மாநிலம், மும்பையிலேயே இருக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், முதல்வர் குமாரசாமி கொண்டு வந்துள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது, சட்டசபையில் இன்றுவிவாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து, ஓட்டெடுப்பு நடக்க இருந்ததால், கூட்டணி அரசை தக்க வைக்கும் முயற்சியில், ஆளும் கட்சி யினர் இறங்கினர்.இதற்காக, முதல்வர் குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர்களும், அமைச்சர், கே.ஜே.ஜார்ஜ் வீட்டில், அவசர ஆலோசனை நடத்தினர். பின், சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்து பேசினர். இந்நிலையில் ஓட்டெடுப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஓட்டெடுப்பு

அப்போது, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் மட்டும் நடத்தி, ஓட்டெடுப்பு நடத்துவதை ஒத்திவைக்கும்படி கோரியதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவர்களின் கோரிக்கையை ஏற்க, சபாநாயகர் மறுத்து விட்டதாக சொல்லப் படுகிறது.சபாநாயகர் அறையில் இருந்து
கூட்டணி தலைவர்கள் வெளியேறியவுடன்,

முன்னாள் சபாநாயகர், போப்பையா தலைமையிலான, பா.ஜ.,வினர், சபாநாயகரை சந்தித்து, 'நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தாமதம் செய்யக் கூடாது' என,வலியுறுத்தினர்.


கடைசி கட்ட முயற்சியாக, ராஜினாமா செய்தவர்களின் மனதை மாற்றி வரவழைத்து விடலாம் என்பது, ஆளும் கூட்டணி தலைவர்களின் நம்பிக்கை.இதற்கிடையே, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின், தேசிய தலைவர், தேவகவுடா, கர்நாடக அட்வகேட் ஜெனரல், உதய் ஹொல்லா விடம், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, இன்றைய சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்காத, 16 எம்.எல்.ஏ.,க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வரவில்லை
அதே நேரத்தில், மும்பையில் தங்கியிருக்கும் அனைத்து அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களுக்கும் நேற்று இரவு வரை, கொறடா உத்தரவு வரவில்லை என, அங்குஇருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று நடக்கும் நிலையில், அதிருப்தி, எம்.எல்.ஏ.,க் கள், 16 பேர் சபைக்கு வர மறுத்துள்ளனர். அதனால், சட்டசபையில், காங்கிரஸ் பலம், சபாநாயகரையும் சேர்த்து, 66 ஆக குறைந்துள்ளது. ம.ஜ.த.,வுக்கு, 34 உறுப்பினர்கள் உள்ளனர்.
பகுஜன் சமாஜ், எம்.எல்.ஏ., இந்த கூட்டணிக்கு ஆதரவாக உள்ள நிலையில், அரசுக்கு ஆதரவாக, 101 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பர். பா.ஜ.,வுக்கு அக்கட்சியின், 105 எம்.எல்.ஏ.,க்களுடன், இரு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள்

ஆதரவையும் சேர்த்து பலம், 107 ஆக உள்ளது.ஆளுங்கூட்டணிகட்சிகளை விட, பா.ஜ.,வுக்கு கூடுதல் எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, கூட்டணி ஆட்சி கவிழும் வாய்ப்பே அதிகம் என, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

எனினும், கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, வெவ்வேறு சொகுசு விடுதிகளில் தங்கியுள்ள தங்கள், எம்.எல்.ஏ.,க் களுக்கு, மூன்று கட்சி தலைவர்களும் ஆலோசனை கூறியுள்ளனர்.

ஓட்டெடுப்பு எப்படி?


ஓட்டெடுப்பு குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் அளித்த பேட்டி:நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவதா அல்லது நேராக ஓட்டெடுப்பு நடத்துவதா என்பதை, முதல்வர் தீர்மானித்து கொள்ளலாம். ஓட்டெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒரு மணி அடிக்கப்படும். அப்போது, சட்டசபையின் அனைத்து கதவுகளும் மூடப்படும்.அதன் பின், எம்.எல்.ஏ.,க்களாக இருந்தாலும், உள்ளே அனுமதிக்க முடியாது.தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், முதலில் கையை உயர்த்த வேண்டும். எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இரண்டாவதாக கையை உயர்த்த வேண்டும்.பின், ஒவ்வொரு வரிசையாக எழுந்து நின்று அவர்கள் எண்ணப்படுவர். அவர்களிடம் கையெழுத்து பெறப்படும். இறுதியில், யார் அதிக பலத்தை கொண்டுள்ளனர் என்பதை கணக்கிட்டு முடிவு அறிவிக்கப்படும்.இவ்வாறு. அவர்கூறினார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு

ம.ஜ.த., மற்றும் காங்கிரஸ்

அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, உச்ச நீதிமன்ற அமர்வு, பல்வேறு உத்தரவு களை நேற்று பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவை ஏற்பது குறித்து, கர்நாடக சபாநாயகர், உரிய முடிவை எடுக்கலாம். இந்த வழக்கில், நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் அல்லது கூறிய கருத்துகளை, மனதில் கொள்ளாமல், சபாநாயகர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம். அவர் எடுக்கும் முடிவை, இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களை, சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது.


சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதா அல்லது புறக்கணிப்பதா என்பதை, அவர்களே முடிவு செய்து கொள்ள, அனுமதிக்க வேண்டும்.இந்த வழக்கில், நடுநிலையான உத்தரவை பிறப்பிக்க விரும்புகிறோம். குறிப்பாக, கர்நாடகா சட்ட சபையில் அடுத்து நடக்கவுள்ள நிகழ்ச்சிகளை கருத்தில் கொண்டே, இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டு ள்ளது.இவ்வாறு, அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

'அடுத்த வாரத்தில்
பா.ஜ., அரசு'

கர்நாடகா விவகாரம் குறித்து, பா.ஜ., தேசிய பொதுச் செயலர், பி.முரளிதர் ராவ், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், நிருபர்களிடம் கூறியதாவது:இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பித்து உள்ளது. சபாநாயகர் என்பவர், ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதையே இந்த தீர்ப்பு உறுதி செய்கிறது.


உச்ச நீதிமன்ற உத்தரவால், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சட்டசபைக்கு வரும்படி கொறடா கட்டாயப்படுத்த முடியாது. அதனால், தகுதி நீக்கம் என்ற பேச்சு எழாது.காங்., - ம.ஜ.த., கூட்டணி அரசு, பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டது. நம்பிக்கை ஓட்டெடுப்பில், அது தோல்வி அடையும். அடுத்த வாரத்தில், கர்நாடகாவில், பா.ஜ., அரசு அமையும். மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற பொறுப்பு, எங்களுக்கு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
18-ஜூலை-201914:27:43 IST Report Abuse

balகாங்கிரஸும் ஜனதா தளமும் திருடனுங்க...வாக்கெடுப்பை ஒத்தி வைப்பாங்க...திரும்பவும் குதிரை பேரம் நடக்கும்...இதுக்குள்ளே ஐந்து வருடம் போய்விடும்.

Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
18-ஜூலை-201910:20:31 IST Report Abuse

 nicolethomsonவாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது சித்துவின் வலது கை ராமலிங்க ரெட்டி பெங்களூரு திரும்பி விட்டார் அதோடு நேற்று குமாரசாமி பேட்டி கொடுத்ததில் இருந்து ரொம்ப நம்பிக்கையாக இருக்கிறார் என்று தெரிகிறது

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201909:49:15 IST Report Abuse

ஜெயந்தன்இந்திய ஜனநாயகத்தில் பல குறைபாடுகள் உள்ளன. வாக்கு பெற்ற பின்பு அவர்களை எவனையும் கேள்வி கேட்க முடியாது என்ற இறுமாப்பில் இவர்கள் ஆட்டம் ஆடி கொண்டிருக்கிறார்கள்...

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X