மத்திய அரசு முயற்சியால் 27 குற்றவாளிகள் நாடு கடத்தல்

Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 27 குற்றவாளிகள் நாடு கடத்தல்


புதுடில்லி: 'மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், கடந்த, 2016ல் இருந்து, 27 குற்றவாளிகள், வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர்; 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் விடுத்துள்ள,'நோட்டீஸ்' மூலம், 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என, ராஜ்யசபாவில்தெரிவிக்கப்பட்டது.


111 பேர்


ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய உள்துறை இணையமைச்சர், ஜி.கிஷண் ரெட்டி கூறியுள்ளதாவது:வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள, நம் நாடால் தேடப்படும் குற்ற வாளிகளை பிடிப்பதற்கு, 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீசின் உதவியை நாடுகிறோம்.





அந்த அமைப்பு, 'ரெட் கார்னர்' என்ற நோட்டீஸ் பிறப்பிக்கும். அதன்படி, தேடப்படும் குற்றவாளி எந்த நாட்டில் இருந்தாலும், அந்த நாட்டு போலீஸ் அவர்களை கைது செய்யும்.இவ்வாறு தேடப்படும் குற்றவாளிகள், அந்தந்த நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி, நாடு கடத்தப்படுவர்.கடந்த, 2016 முதல், இந்தாண்டு, ஏப்., 1 வரையிலான காலத்தில், 27 தேடப்படும் குற்றவாளிகள், பல்வேறு நாடுகளில் இருந்து நாடு கடத்தி, இந்தியா வரப்பட்டுள்ளனர்.இன்டர்போல் நோட்டீஸ் மூலம், 2016ல் இருந்து இந்தாண்டு ஏப்., 1 வரை, 111 பேர் , பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


கணக்கெடுப்பு



ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், உள்துறை அமைச்சர், அமித் ஷா கூறியதாவது:தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு தற்போது, அசாமில் மட்டுமே நடக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்தக் கணக்கெடுப்பு நடக்கிறது.நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், வெளிநாட்டைச் சேர்ந்த அகதிகள் வசிக்கின்றனரா என, ஆராயப்படும். சர்வதேச விதிகளின்படி, அவர்கள் நாடு கடத்தப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-ஜூலை-201901:27:31 IST Report Abuse
J.V. Iyer இங்கு உள்ள வாய்ச்சவடால் போராளிகளை தயவுசெய்து பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள்.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
17-ஜூலை-201923:51:06 IST Report Abuse
spr செய்தியுடன் ஒப்பிடுகையில் தலைப்பு தவறான கருத்தை உருவாக்குகிறது "மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், கடந்த, 2016ல் இருந்து, 27 குற்றவாளிகள், வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தி வரப்பட்டுள்ளனர்" இதுவே செய்தி. ஆனால் தலைப்பு "மத்திய அரசு முயற்சியால் 27 குற்றவாளிகள் நாடு கடத்தல்" என்றிருப்பதால் மத்திய அரசு முயற்சி செய்து இவர்களை நம் நாட்டை விட்டு தப்பியோட விட்டது போல கருத வைக்கிறது "மத்திய அரசு நாட்டை விட்டு ஓடிய குற்றவாளிகளைக் கைது செய்து கொண்டு வந்திருக்கிறது" என்று செய்தி தலைப்பிட்டு இருந்தால் பொருத்தம்
Rate this:
Share this comment
18-ஜூலை-201914:40:53 IST Report Abuse
மோகனசுந்தரம்சரியான பதிவு spr அவர்களே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X