பதிவு செய்த நாள் :
தப்பினார் குல்பூஷண் ஜாதவ்
தூக்கு நிறுத்தி வைப்பு

த ஹேக்:உளவு பார்த்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைக்கு சதி செய்ததாகவும் நமது கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு 49 பாக். ராணுவ நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

 தப்பினார், குல்பூஷண் ஜாதவ், தூக்கு, நிறுத்தி வைப்பு

தண்டனையை மறுஆய்வு செய்யும்படி பாக்.குக்கு உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிரா வைச் சேர்ந்த நமது கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை அண்டை நாடான பாக். 2016 மார்ச்சில் கைது செய்தது.




மரண தண்டனை


உளவு பார்த்ததாகவும் பயங்கரவாத செயலுக்கு சதி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப் பட்டது. இதை விசாரித்த பாக். ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.இதை எதிர்த்து ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் த ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மத்திய அரசு 2017 மே மாதம் வழக்கு தொடர்ந்தது.

அதை ஏற்ற சர்வதேச நீதிமன்றம் வழக்கின் விசாரணை முடியும் வரையில் தண்டனையை நிறுத்தி வைக்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.



கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் 16 நீதிபதிகள் அடங்கிய குழு நேற்று தீர்ப்பு அளித்தது. அதில் 15 நீதிபதிகள் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்புஅளித்துள்ளனர்.


பாக்., மீறல்




தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:வியன்னா ஒப்பந்தத்தின்படி ஒரு நாட்டைச் சேர்ந்தவரை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை களை பாக். மீறியுள்ளது. இந்திய அரசு பலமுறை மனு கொடுத்தும் அவரை தூதரக ரீதியில் சந்திக்க அனுமதி மறுக்கபட்டுள்ளது தவறான நடவடிக்கை. மேலும் தனது தரப்பை தெரிவிக்க குல்பூஷண் ஜாதவ் வழக்கறிஞரை நியமிக்கக் கூட அனுமதிக்க வில்லை. இந்த விவகாரம் முழுவதும் அத்துமீறலாகும்.



குல்பூஷண் ஜாதவை கைது செய்த மூன்று வாரங் களுக்கு பிறகே இந்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க பட்டது. இதன் மூலம் வியன்னா ஒப்பந்தத்தை பாக்.

Advertisement

மீறியுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை.இந்த விவகாரத்தில் குல்பூஷண்ஜாதவுக்கு அளிக்கப் பட்டுள்ள தூக்கு தண்டனையை பாக். அரசு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை பாக். ராணுவ நீதிமன்றம் அளித்துள்ள தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கிறோம்.



மேலும் ஜாதவை சந்திக்க இந்திய அரசுக்கு தூதரக வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தை மிகவும் கனிவுடன் பாக். அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.இந்த தீர்ப்பு பாக். அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப் படுகிறது. அதே நேரத்தில் நமது அரசு மேற் கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்துள்ள வெற்றியாகவும் அமைந்துள்ளது. அதிலும் 15 : 1 என்ற விகிதத்தில் பெரும்பான்மை நீதிபதிகள் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து உள்ளனர்.


கிராமத்தில் மகிழ்ச்சி



சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு குல்பூஷண் ஜாதவின் சொந்த ஊரான மஹாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் ஜாவ்லி கிராம மக்கள் மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர். இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர். 'பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாதவை உடனடியாக பாக். அரசு விடுவிக்க வேண்டும்' என அவர்கள் வலியுறுத்தினர்.


Advertisement

வாசகர் கருத்து (4+ 20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
18-ஜூலை-201919:57:48 IST Report Abuse

முதல் தமிழன்Please release

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
18-ஜூலை-201916:44:23 IST Report Abuse

Endrum Indianஉளவு பார்த்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைக்கு சதி செய்ததாகவும்???உளவு பார்த்தது என்று ஏதோ ஒரு ஆதாரம் வைத்து ருசு செய்து விடுவார்கள், இந்த பயங்கரவாத நடவடிக்கை தான் ஒதைக்குது, இது பாகிஸ்தானிய முஸ்லிம்களுக்கு என்றே தயாரித்து வைத்த நடவடிக்கை ஆயிற்றே??? அப்போ ஐ.எஸ்.ஐ.எஸ் சுடன் தொடர்பா, அல் கைதா இயக்கத்துடன் தொடர்பா???அப்படி இருந்தால் வரவேற்பு அதிகம் செய்ய வேண்டுமே பாகிஸ்தான்???ஓ இந்த பாகிஸ்தானிய முஸ்லிம்கள் வசிக்கும் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வா இந்து பரிஷத் இயக்கம் தான் இந்து பயங்கரவாத இயக்கம் என்று இந்த முஸ்லிம்களால் சொல்லப்படுகின்றது அதை தான் பாகிஸ்தான் மேற்கோள் காட்டுமா???

Rate this:
blocked user - blocked,மயோட்
18-ஜூலை-201904:04:41 IST Report Abuse

blocked userபாக்கிகள் என்று சர்வதேச சட்டத்தை மதித்தார்கள்? இந்த முறை மதிக்கிறார்களா என்று பார்க்கலாம்.

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X