பொது செய்தி

தமிழ்நாடு

ஏரிகளை நீங்களும் தூர் வாரலாம்: 10 நிபந்தனையுடன் அனுமதி தருது அரசு

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஏரி,தூர் வாரலாம், நிபந்தனை,அனுமதி,அரசு

சென்னை: 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என நீர்நிலைகளை துார்வாரி சீரமைக்க பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு தமிழக அரசு 'சிவப்பு கம்பளம்' விரித்துள்ளது. பத்து நிபந்தனைகளுடன் மாவட்ட கலெக்டர்களும் நீர்நிலைகளை சீரமைக்க அனுமதி அளித்து வருகின்றனர்.



பருவமழை பொய்த்ததாலும் நீர் நிலைகள் அழிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நேரத்தில் அரசை நம்பியிருக்காமல் 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என பொதுநல சங்கங்களும் தன்னார்வலர்களும் நீர்நிலைகளை சீரமைக்க முன் வர வேண்டும் என நம் நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டதோடு விழிப்புணர்வு செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆர்வமுடன் நீர்நிலைகள் சீரமைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித் துறையும் அனுமதி தராமல் இழுத்தடித்து வந்தன. இதையறிந்த முதல்வர் பழனிசாமி ஏரி சீரமைப்பில் ஈடுபடுவோருக்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.இதன்படி மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்து ஊக்கம் அளித்து வருகிறது. இதற்கான அனுமதி பெற 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நிபந்தனைகள் என்ன?

*களை அகற்றி அருகில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்ளாட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சேர்க்க வேண்டும்

* ஏரி கரையின் மீதுள்ள செடி கொடி முட்புதர்களை மட்டுமே அகற்ற வேண்டும்

* ஏரியின் நீர் பிடிப்பு பகுதியிலிருந்து எடுக்கப்படும் மண்ணை கரையை பலப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்; எக்காரணம் கொண்டும் மண்ணை வெளியில் எடுத்துச் செல்ல கூடாது

* துார்வாரும் பணியின் போது நீரியல் அமைப்புகளான கரை மதகுகள் கலங்கல்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்த கூடாது

* ஏரியின் எதிர் வாயிலை சுற்றி குப்பைகள் கழிவுகள் கொட்டப்படாத வகையில் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்
* ஏரிக்குள் துார்வாரும் பணிகள் துவங்கும் முன் நீர்வள ஆதாரத் துறையின் பிரிவு அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

* ஏரியில் துார்வாரும் பணிகளை அனுமதி வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்

* துார்வாரும் பணிகள் துவங்கும் முன் துவங்கிய பின் முடிந்த பின் ஆகிய மூன்று நிலைகளில் ஒவ்வொரு பகுதியையும் புகைப்படம் எடுக்க வேண்டும். அனுமதி பெற்ற அமைப்பின் பொறுப்பாளர் இந்த புகைப்படங்களை நீர்வள ஆதார துறையிடம் ஒப்படைக்க வேண்டும்

* பணிகள் குறித்த காலத்தில் முடிக்கப்படா விட்டாலோ தொழில்நுட்ப ஆலோசனையின்படி பணிகள் மேற்கொள்ளப்படா விட்டாலோ எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அனுமதி ரத்து செய்யப்படும்

* ஏரிகளில் சீரமைப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்; பணிகள் முடிந்தபின் ஏரிகளின் மீது எவ்வித உரிமையும் கோர முடியாது.

இந்நிபந்தனைகளுக்கு உட்படும் அமைப்புகள் மட்டுமே துார் வாரும் பணிகளில் ஈடுபட முடியும். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏரிகளை துார்வார தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் அனுமதி கடிதங்களில் இந்த நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.


அரசின் நோக்கம் தான் என்ன

மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் பயனளிக்கத் தக்கவை தான் என்றாலும் தன்னார்வலர்களை பணி செய்ய விடாமல் துண்டிக்கும் நோக்கில் 'பணிகள் குறித்த காலத்தில் முடிக்கப்படா
விட்டாலோ தொழில்நுட்ப ஆலோசனைப்படி நடக்காவிட்டாலோ அனுமதி துண்டிக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தமிழகம் பழையபடி தண்ணீர் அற்ற நிலைக்குச் செல்லக் கூடிய நிலையை ஏற்படுத்தி விடும்.

இது குறித்து தன்னார்வலர்கள் சிலரிடம் கேட்டபோது 'நாங்கள் களத்தில் இறங்கியதன் நோக்கமே நீர்நிலைகளைத் துார்வார அரசு ஒரு துளியும் முனைப்பு காட்டவில்லை ஆதாயம் பார்க்க நினைக்கிறது என்பது தான். இப்போது எங்களின் கையைக் கட்டிப் போட அரசு இப்படி ஒரு நிபந்தனையை விதிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது' எனக் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
20-ஜூலை-201906:57:23 IST Report Abuse
Swaminathan Chandramouli இந்த அரசாங்கம் என்றைக்காவது அவர்கள் கூறும் பத்து நிபந்தனைகளை ஏற்று ஏரிகளை தூர் வாரி இருக்கிறதா இந்த திட்டங்களுக்கு ஏதாவது நிதி ஒதுக்கி செயல் படுத்தி இருக்கிறதா . தன்னார்வலர்களை மிரட்டி அவர்களை சிறைக்கு அனுப்புவதில் குறியாக இருக்கிறது . ஒதுக்கப்படும் நிதியை கபளீகரம் செய்ய அதிகாரிகள் நாக்கை தொங்க போட்டுகொண்டு அலைகிறார்கள் . பணம் கீழ்மட்டத்தில் டவாலியில் இருந்து மேலே மந்திரிகள் வரைக்கும் பாய்கிறது . தமிழகம் லஞ்ச லாவண்ய அரசாங்கத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு திணறுகிறது . ஒருநாள் மண்டையை போட்டுவிடும்
Rate this:
Share this comment
Cancel
soundararajan krishnaswamy - Riyadh,சவுதி அரேபியா
19-ஜூலை-201915:52:14 IST Report Abuse
soundararajan krishnaswamy குளம், ஏரியிலிருந்து எடுக்கப்படும் வண்டல் மண் மீண்டும் விவசாய பூமிக்கே சென்றடைய வேண்டும், ஏனெனில் அந்த மண் அங்கிருந்துதான் வந்தது இந்த கூறு கெட்ட அரசு விவசாயிகள் மண் எடுப்பதை தடுப்பது விவசாய நிலங்களின் வளத்தை குறைத்து விவசாயத்தை அழிக்கும் செயலாகும். விவசாய நிலங்களின் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறைக்கு இதுதான் காரணம். மேலும் குளம் ஏரியிலிருந்து நீர் நிலத்தில் இறங்க வேண்டுமென்றால் கீழிருக்கும் வண்டலை எடுத்தால் நலம், இல்லையெனில் வீணாக நீர் தேங்கி அனாவிசியமாக ஆவியாக அதிக அளவு நீரை இழக்க நேரிடும்.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஜூலை-201920:09:57 IST Report Abuse
RajanRajan சபாஷ், அரசின் இந்த TEN COMMENDMENTS SUPER. உன்னதமான அரசாட்சி. இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு இவனுங்க அத்தனை குளம் ஏரி கால்வாய் வரை ஆகாயத்தாமரை மட்டும் தான் வளர்க்க அனுமதி கொடுப்பானுங்க. வைக்கோல் போரில் ஏதோ ஏறி உட்க்கார்ந்து கதை தான் இந்த நிபந்தனைகள். அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற ஒரு இயலாமை ஏன். அரசு கஜானாவில் பணம் இல்லை - கமிஷன் கட்டிங் வழியில்லை. அப்போ தன்னார்வலர்களை களமிறக்கி அதிலே கட்டிங் பார்ப்பங்களோ. இங்கு விஷமிகள் யார் என்பது திராவிட உலகறிந்த ரகசியம். இந்த தூர்வாரும் திருவிழாவுக்கு யார் செலவு செய்ய வேண்டும். ஒரு தேர்தல் என்றால் உடனே கோடிக்கணக்கில் எங்கெல்லாமோ இருந்து பணம் கொட்டுது. ஆனால் நமக்கு நாமே விடியல் சத்தம் போட்டால் இந்த மாதிரி நிபந்தனைகள் கொடி கட்டும் ஆனால் இதற்காக செலவை எந்த கட்சியும் ஏற்க முன்வராது. அத்தனை அக்கறை இந்த நிலத்தடி நீர் வளம் பெருக்குவதில். இப்போ சொல்லுங்கள் இவனுங்களாலே தமிழகம் அது சார்ந்த மக்கள் உருப்படுவாங்களா என்று. தோண்டுற மண்ணை ஏரியின் கரை ஓரம் கூட்டி விட்டு மேற்கொண்டு ஆழப்படுத்தும் படுத்தும் மண்ணை தன்னார்வலர் இயக்கம் இந்த தூர்வாரும் செலவை ஈடு கட்டுற மாதிரி வரைமுறை ஏன் ஏற்படுத்த கூடாதாம். எல்லாத்துக்கும் அந்த காமராஜ் போல சிந்திக்கும் திறன் வேண்டும் சும்மா ஆளாளுக்கு மேடை ஏறி அவருக்கு மாலை போட்டால் அந்த பெரியவர் தகுதி வந்துவிடுமா என்ன. முதலில் சட்டம் போட்டு இந்த அரசியல்வாதிகள் அந்த மகானுக்கு மாலை இடும் தகுதி இழப்பு பண்ணுங்க. உங்களுக்கு புண்ணியமாய் போகும். என்ன ஒரு கேவலம் இது.
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
22-ஜூலை-201919:40:52 IST Report Abuse
THENNAVANகருவேலமரத்தை கண்மாய்களுக்குள் வளர்த்தவர் காமராஜர் அதை வெட்டி காசுபார்த்தவர் கருணாநிதி.,மலைகளை அழித்தவர் எம் ஜி ஆர்.அங்கு இருந்த மரங்களையும் அழித்தவர்கள் தி மு க காரர்கள்.பொதுப்பணித்துறை தங்க முடடை போடும் வாத்து ,வீராணம் ஊழல் ஒரு உதாரணம் . ஏறி தூர் வருகிறோம்,ஏறி தூர்வாருகிறோம் என வருஷம் பூராம் கொள்ளை அடிக்கவிடாமல் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் செயல்படுதல் கழக கண்மணிகள் ,எப்படி கொள்ளை அடிக்கமுடியும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X