பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
போலீஸ் - அர்ச்சகர்கள் மோதல்
காஞ்சி வரதர் கோவிலில் பதற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அர்ச்சகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே, நேற்று, தகராறு ஏற்பட்டதால், பதற்றம் நிலவியது.

போலீஸ்,அர்ச்சகர்கள், மோதல், காஞ்சி, வரதர் கோவில், பதற்றம்


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ம் தேதி முதல், விமரிசையாக நடக்கிறது.தினமும், ஒரு லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவதால், பக்தர்களை சமாளிக்கவும், அவர்கள்

பாதுகாப்புக்காகவும், 2,200 போலீசார் பணியில் உள்ளனர்.அத்தி வரதரை தரிசிக்க செல்வோருக்கு, போலீசார், பலத்த கட்டுப்பாடு விதித்துள்ளனர். அர்ச்சகர்கள் உள்ளேசெல்லவும், போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்.


இந்நிலையில், நேற்று காலை, கோவிலுக்கு செல்ல முயன்ற அர்ச்சகர்களை, போலீசார் தடுத்து, 'பாஸ் வைத்துள்ளீர்களா' என, கேட்டுள்ளனர்.இதனால், போலீசாருக்கும், அர்ச்சகர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. பின், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அர்ச்சகர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.இதனால், கோவிலில், பதற்றம் ஏற்பட்டது. 20 நிமிடங்கள், அத்தி வரதர் தரிசனம் நிறுத்தப்பட்ட

Advertisement

தாகவும் கூறப்படுகிறது.தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா, ஐ.ஜி., ஸ்ரீதர், எஸ்.பி. கண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மாலையில், கோவிலுக்கு சென்றனர்.பிரச்னை குறித்து கேட்டறிந்த பின், அர்ச்சகர்களுக்கு தனி பாஸ் வழங்கவும், அவர்கள் தனி வழியில் செல்லவும், ஐ.ஜி., ஸ்ரீதர் உத்தரவிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
24-ஜூலை-201914:23:35 IST Report Abuse

Sankare Eswarhi

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-ஜூலை-201917:27:15 IST Report Abuse

Lion Drsekarஅரசு என்பதே முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே இயங்குகிறது இதில் கோவில் மட்டும் என்ன விதி விலக்கா? வந்தே மாதரம்

Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-ஜூலை-201914:19:26 IST Report Abuse

skv srinivasankrishnaveniKAAVALTHURAIYUM PUNITHAMAANADHUTHAAN INGKE SAASDHI MADHABEDHAM ILLE KAAKKIUDUPPUTHAAN ELLORUKKUM KANNIYAM KADAMAI KATTUPPAADU ELLAAM IVALUKKU UNDU SILAR KEVALAMAA IRUPPADHAAL PALARIN NERMAIKALAIYUM MARAKKUMBADI AAYIDUTHTHU

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X