உள்ளாட்சித் தேர்தல் வழக்கு கோர்ட் முடித்து வைத்தது

Added : ஜூலை 18, 2019
Advertisement

புதுடில்லி,தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் 2016ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கப்படுகிறது. விரைவில் தேர்தலை நடத்தும்படி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே வழக்கு நடந்து வருகிறது. 'வார்டு மறுவரை செய்யப்படுவதால் அக். 31 வரை அவகாசம் அளிக்க வேண்டும்' என மாநில தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்டுள்ளது.அதையடுத்து ரமேஷ் தாக்கல் செய்துள்ள வழக்கை முடித்து வைப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X