பொது செய்தி

தமிழ்நாடு

வருமான வரி கணக்கு தாக்கல்: 31ம் தேதி கடைசி நாள்

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை : கடந்த 2018 - 19ம் நிதியாண்டுக்கான அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ல் முடிகிறது.latest tamil newsகடந்த 2018 - 19க்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏப்ரலில் துவங்கியது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி உச்சரவரம்புக்குக் குறைவாக இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்வது கடந்த ஆண்டு முதல் கட்டாயம் ஆகியுள்ளது. இதற்கான அவகாசம் ஜூலை 31ல் முடிகிறது.


latest tamil newsவருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2018 - 19ம் நிதியாண்டின் அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ல் முடிகிறது. இதற்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் அபராதம் செலுத்த வேண்டும். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் 1000 ரூபாய், அபராதமும், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர் டிச. வரை 5000 ரூபாயும், ஜன. முதல் மார்ச் வரை 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்.


latest tamil newsமேலும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படவில்லை. வரி ஆதாயத்திற்கு பின் 2.5 லட்சம் முதல்5 லட்சம் ரூபாய் வருவாய் இருந்தால் 2.5 லட்சத்திற்கு மேல் உள்ள தொகைக்கு வருமான வரி உண்டு. ஆனால் அந்த வரித் தொகையை தள்ளுபடி செய்வதற்கான சலுகை தான் நடப்பு 2019 - 20ம் நிதியாண்டில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-ஜூலை-201908:27:00 IST Report Abuse
A.George Alphonse நல்லதுக்கு காலம் இல்லை.ஒழுங்காக வரி தாக்கல் செய்பவர்களுக்கு தண்டனையா? அவ்வளவு கடின நடவடிக்கை எதற்கு? மேலும் சில நாட்கள் அவகாசம் கொடுத்தால் என்ன?
Rate this:
Cancel
Rangaswamy Jayaram - coimbatore,இந்தியா
18-ஜூலை-201905:23:42 IST Report Abuse
Rangaswamy Jayaram வருமான வரி பிடித்தம் செய்தவர்கள் அதற்கான கணக்கை தாக்கல் செய்ய 30.04.2019 இல் இருந்த கெடு தேதி 30.06.2019 வரை நீடிக்கப்பட்டது. வருமான வரி துறை அந்த கணக்குகளை தனது இணையதளத்தில் 26 A S இல் பதிவு செய்ய மேலும் சிறிது கால அவகாசம் எடுத்து கொண்டது.எனவே அபராதம் இல்லாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 30.09.2019 வரை கால நீட்டிப்பு செய்வது அவசியமாகிறது. 26AS முழுமையாக பதிவேற்றம் செய்த பின் அதை சரிபார்த்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்தது நல்லது.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
18-ஜூலை-201904:41:41 IST Report Abuse
Ram 5 லட்சம் விளக்கு என்று இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்து ஏம்மாற்றிவிட்டார்கள், அப்படி இருக்கும்போது மக்கள் எப்படி சரியாக வரி கட்ட முன்வருவார்கள்
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜூலை-201908:21:33 IST Report Abuse
ஆரூர் ரங்ஐந்து லட்சம் வரை வருமானத்துக்கு இன்றுகூட வரிகட்டவேண்டியதில்லையே . ஆனால் இரண்டரை லட்சத்துக்குமேல் வருமானம் இருந்தால் வருமானக் கணக்கு மட்டுமே தாக்கல் செய்துதான் ஆகவேண்டும் .இது வரி ஏய்ப்பாளர்களைக் கண்டுபிடிக்க அத்தியாவசியம் இன்னும் சொல்லப்போனால் வரிவிலக்குகளை முழுமையாகப் பயன்படுத்தினால் எட்டு/ஒன்பது லட்சம் வருமானமுள்ளவர்கூட வரிகட்டவேண்டியதிருக்காது .இப்போதெல்லாம் கணவன் மனைவி இருவருமே சம்பாதிக்கும் சூழலில் இந்த தொகை இருமடங்காக இருக்குமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X