பொது செய்தி

இந்தியா

பெற்றோர் சண்டை; ஜனாதிபதிக்கு சிறுவன் கடிதம்

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

பாகல்பூர்: பெற்றோர் தொடர்ந்து சண்டையிட்டுக் கொள்வதால், மனம் வெறுத்துப் போன, 15 வயது சிறுவன், உயிரை போக்கிக் கொள்ள அனுமதி கோரி, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதை அடுத்து, இது குறித்து விசாரிக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டு உள்ளது.



latest tamil news



பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, 15 வயது சிறுவன், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்துக்கு, சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதினான். அதன் விபரம்: நான், பீஹார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனக்கு, 15 வயதாகிறது. என் தந்தை, மாநில ஊரக வளர்ச்சி துறையில், மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் சமீபத்தில், ஜார்க்கண்ட் மாநிலம், தியோகர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நான் என் தந்தையுடன் வசிக்கிறேன். என் தாய், பீஹாரில் வங்கி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.


latest tamil news



என் பெற்றோருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி சண்டை நடக்கிறது. அவர்கள் மிக மோசமான வார்த்தைகளை பேசி, சண்டையிட்டுக் கொள்கின்றனர். என் தந்தை, புற்றுநோயால் அவதிப்படுகிறார். இந்நிலையில், ரவுடிகளை அனுப்பி, என் தாய் அவரை மிரட்டுகிறார். இதனால், நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, என் உயிரை போக்கிக் கொள்ள, அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news



இந்த கடிதம், ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து, பிரதமர் அலுவலக கவனத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் குறித்து, உடனடியாக விசாரணை நடத்தி, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு, பீஹார் மாவட்ட நிர்வாகத்துக்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-ஜூலை-201912:36:45 IST Report Abuse
skv srinivasankrishnaveni மோடியை விட ஜனாதிபதி பெரிய பதவிலே இருக்காரென்று கடிதம் எழுதிருக்கான் பாவம். அவன் மனம் நிலையை பாருங்கள் முடிஞ்சால் உதவலாம் இல்லே வாயைமூடின்னு போகவும் , குற்றமே சொல்லிண்டு திரியும் கணவன் ஆர் மனைவிக்கு புத்திபபவர்ணம் ரெண்டு எவ்ளோமனபேதங்கள் இருந்தாலும் ப்ளீஸ் பிள்ளைகள் கண்முன்பு சண்டைபோடவேண்டாம் பல வீடுகளின் மெய்ன் சத்ரு கைபேசியும் அதன்விளைவாக வரும் போர்களும் தான் அடுத்து சாராயம் குடிச்சுட்டு வந்து மனைவியை திட்டி அடிச்சும் நாசமா செய்யும் கணவன் என்ற பேய்கள் ஓவர் சந்தேகம் , நம்பிக்கையின்மை ஒரு காரணம், ஒத்துபோகலியா ப்ளீஸ் பிள்ளைகளே பெறவேண்டாம் அடிச்சுனே சாவுங்க காலம் பூரா பல ஆண்களின் ஈகோவும் ஒருகணம் .தான் ஆன் என்ற அகம்பாவம் அதிகம் உள்ள ஆன் /பெண் இருவரும் (வேலைக்கு போனாலோ போகலியோ ஈகோவால் வருகின்ற சண்டைகள் , மாமியார் என்ற நாத்தனார் என்ற ஈனபுத்திசாலிகளின் ஆட்டம் எல்லாம் தான் சண்டைக்கு மூல காரணம்
Rate this:
Cancel
18-ஜூலை-201918:24:57 IST Report Abuse
ஆப்பு மோடி அய்யாவுக்கு கடிதம்.போட்டுப் பாரேன் தம்பி...
Rate this:
Cancel
Xavier - Muscat,ஓமன்
18-ஜூலை-201914:26:27 IST Report Abuse
Xavier இதுலே இருந்து அப்பா அம்மா ரெண்டுபேரு பக்கமும் நியாயம் இல்லனு தெரியுது இருந்துருந்தா மகன் யாராவுது ஒருத்தர் பக்கம் இருந்துகிட்டு ஜோரா சண்டை போட்டுக்கிட்டு இருந்துருப்பான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X