காரைத் திருடி 1000 கி.மீ., பயணித்த சிறுவர்கள்

Added : ஜூலை 18, 2019
Share
Advertisement

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன்; இரண்டு 13 வயது சிறுவர்கள்; 10 வயது சிறுமி என நான்கு பேர் இணைந்து ஒரு காரைத் திருடியுள்ளனர். சுற்றுலா செல்வதாக வீட்டில் துண்டுச் சீட்டில் எழுதி வைத்து விட்டு சென்ற அவர்களை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இரண்டு நாட்களில் அவர்கள் 1000 கி.மீ. துாரம் பயணம் செய்துள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அவர்கள் பிடிபட்டனர். வழியில் பெட்ரோல் உள்பட பல பொருட்களை இவர்கள் திருடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் எதற்காக இந்த சாகசத்தில் இவர்கள் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X