பொது செய்தி

இந்தியா

அமைச்சர்கள் பங்களா பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
Centre, hire, single agency, maintenance, Union ministers, bungalows, Delhi, அமைச்சர்கள், பங்களா பராமரிப்பு, நிதி ஒதுக்கீடு

புதுடில்லி: டில்லியில், மத்திய அமைச்சர்களின் பங்களாக்களை பராமரிக்கும் பொறுப்பை, அடுத்த மூன்றாண்டுகளுக்கு, ஒரே தனியார் நிறுவனத்தின் வசம் வழங்க, மத்திய பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின் அமைச்சர்கள் அனைவருக்கும், டில்லியில் பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் கட்டுமானம் மற்றும் ஒதுக்கீடு பணிகளை, மத்திய பொதுப்பணித் துறை செய்து வருகிறது. இந்த பங்களாக்களை பராமரிக்கும் பணி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு வந்தன.இந்த நடைமுறையை மாற்றி, 2022 வரையிலான அடுத்த மூன்றாண்டுகளுக்கு, அமைச்சர்களின் பங்களாக்களை பராமரிக்கும் பணியை, ஒரு தனியார் நிறுவனத்தின் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 72.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news




பங்களாக்களின் தினசரி பராமரிப்பு, சிறப்பு மராமத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை, இந்த தனியார் நிறுவனம் செய்து தர, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூலை-201918:19:02 IST Report Abuse
ஆப்பு எம்.பி க்கள் எதுக்கு அமைச்சர்களாகணும். பட்ஜெட் போடணும். பேசாம தனியாரிடம் அமைச்சர்களின் வேலைகளை ஒப்படைச்சுடலாமே. தீயா வேலை செய்வாங்க..
Rate this:
Share this comment
Cancel
18-ஜூலை-201918:16:21 IST Report Abuse
ஆப்பு பராமரிப்புக்கே இத்தனை கோடிகள். இவர்கள் ஏழை மக்களுக்கு பட்ஜட் போட்டு அவங்க வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போறாங்களாம்.
Rate this:
Share this comment
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
18-ஜூலை-201915:08:46 IST Report Abuse
sridhar எல்லாம் மக்கள் காசு தானே ஏன் பராமரிப்பை அமைச்சர்களே பார்த்துக்கொள்ளலாமே ஏன்அவர்களிடம்காசு இல்லையாமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X