அமைச்சர்கள் பங்களா பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு| Centre to hire single agency for maintenance of Union ministers' bungalows in Delhi | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமைச்சர்கள் பங்களா பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (11)
Share
Centre, hire, single agency, maintenance, Union ministers, bungalows, Delhi, அமைச்சர்கள், பங்களா பராமரிப்பு, நிதி ஒதுக்கீடு

புதுடில்லி: டில்லியில், மத்திய அமைச்சர்களின் பங்களாக்களை பராமரிக்கும் பொறுப்பை, அடுத்த மூன்றாண்டுகளுக்கு, ஒரே தனியார் நிறுவனத்தின் வசம் வழங்க, மத்திய பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின் அமைச்சர்கள் அனைவருக்கும், டில்லியில் பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் கட்டுமானம் மற்றும் ஒதுக்கீடு பணிகளை, மத்திய பொதுப்பணித் துறை செய்து வருகிறது. இந்த பங்களாக்களை பராமரிக்கும் பணி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு வந்தன.இந்த நடைமுறையை மாற்றி, 2022 வரையிலான அடுத்த மூன்றாண்டுகளுக்கு, அமைச்சர்களின் பங்களாக்களை பராமரிக்கும் பணியை, ஒரு தனியார் நிறுவனத்தின் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 72.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news
பங்களாக்களின் தினசரி பராமரிப்பு, சிறப்பு மராமத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை, இந்த தனியார் நிறுவனம் செய்து தர, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X