சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ராக்கெட்டை ஏவும் போயிங் விமானம்

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ராக்கெட்டை ஏவும் போயிங் விமானம்

ராக்கெட் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ, அதிக எரிபொருள் செலவும், நேரச் செலவும் ஏற்படுகின்றன. இவற்றைக் குறைக்க, இங்கிலாந்தைச் சேர்ந்த, 'வர்ஜின் ஆர்பிட்' புதிய உத்தியை அண்மையில் சோதித்து வெற்றி கண்டுள்ளது.

சராசரி, 747 ரக போயிங் விமானத்தின் இறக்கைகளில் ராக்கெட்டை பொருத்தி, வளி மண்டலத்தின் விளிம்பு வரை பறந்து, ராக்கெட்டை பத்திரமாக கழற்றி விட்டுவிடுவது தான் அந்த உத்தி.

இந்த முறைப்படி ராக்கெட்டில் ஒரு ரொட்டித் துண்டு அளவிலிருந்து, ஒரு குளிர்பதனப் பெட்டி அளவு வரையுள்ள செயற்கைக் கோள்களை ஏவ முடியும் என, வர்ஜின் ஆர்பிட்டின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சாதாரண விமான நிலையத்திலிருந்தே போயிங் கிளம்பும். தனியாக ஏவுதளம் தேவையில்லை. எனவே, செயற்கைக் கோளை ஏவ, 24 மணி நேர முன் தயாரிப்பு இருந்தால் போதும். இப்போது, ஏவுதளங்களில் குறைந்தது, 24 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

அடுத்து, போயிங் வழக்கமான விமான எரிபொருளை பயன்படுத்துவதால், ராக்கெட் எரிபொருள் செலவு குறைகிறது.

அண்மையில், வர்ஜின் ஆர்பிட், தன், 'லாஞ்ச்சர் ஒன்' என்ற காலி ராக்கெட்டை, 'காஸ்மிக் கேர்ள்' என்ற போயிங்கின் இறக்கையில் பொருத்தி, அமெரிக்காவின் கலிபோர்னியா பாலைவன பகுதிக்கு மேலே, சில ஆயிரம் அடி உயரத்திலிருந்து கழற்றி விட்டு வெற்றிகரமாக சோதித்துள்ளது.

அடுத்து, 2021லிருந்து வர்த்தக ரீதியில் விமானம் மூலம் ராக்கெட்டை செலுத்தும் சேவையை, வர்ஜின் ஆர்பிட் துவங்க திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
24-ஜூலை-201906:11:07 IST Report Abuse
 nicolethomson பூமியை கழிவு கூடாரம் ஆக்கியாயிற்று இனி விண்வெளி தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X