பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதரை தரிசிக்க குவிந்த மக்கள்

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (47)
Advertisement
காஞ்சிபுரம், அத்திவரதர், கோயில்,

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க லட்சகணக்கான மக்கள் குவிந்ததால், காஞ்சிபுரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ம் தேதி முதல், விமரிசையாக நடக்கிறது.தினமும், ஒரு லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசித்து செல்கின்றனர். 18 ம் நாளான இன்று(ஜூலை 18) கத்தரிப்பூ பட்டாடையில், செண்பக பூ அலங்காரத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


நேற்று(ஜூலை 17) சந்திர கிரகணத்தை ஒட்டி பெரும்பாலான பக்தர்கள் காஞ்சிபுரம் கோவிலுக்கு வராத நிலையில், இன்று அதிகாலை முதல் லட்சகணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க திரண்டுள்ளனர். இதனால், காஞ்சிபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தம்மபேட்டை - வாலாஜாபாத் - காஞ்சிபுரம் பாதையில் சுமார் 15 கி.மீ., தூரம் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இதனை சரி செய்யும்பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeans bala - CHENNAI,இந்தியா
19-ஜூலை-201917:31:42 IST Report Abuse
jeans bala நான் நேரில் 18 ஆம் தேதி விடியற்காலையில் 4 .30 மணியளவில் சென்றேன் ஆட்டு மந்தையை போல ஒருவர் பின் ஒருவரை செல்லும் போது பின்னால் இருப்பவர்கள் தள்ளி விடுகிறார்கள் ஆனால் 4 வரிசை என தின நாளிதழை பார்த்தேன் அது தவறு ஒரே வரிசை அதுவும் ஆட்டு மந்தை வரிசை ஏன் இவ்வளவு மக்கள் வருவார்கள் என தெரிந்தும் கயிறு ஏதும் கட்டவில்லை குழந்தைகளை வைத்திருந்தவர்கள் அழுது விட்டனர் மேலும் ஒரு போலீஸ் கூட கிடையாது அங்கிருந்து மெதுவாக ஒருவர் பின் ஒருவராக சென்று கோயில் மதில் சுவரை அடைவதற்கு மூன்று மணி நேரம் ஆகிறது அதற்குள் சூரியன் வந்து விடுகிறார் அனைவரையும் தள்ளும் போது பெண்கள் கீழே விழுந்து மயக்கம் ஆகி கீழே விழுகின்றனர் அங்கிருந்து மதில் சுவர் ஓரம் கடைசி வரை சென்று வலது புறம் திரும்பும் போது அங்கங்கே போலீஸ் இருக்கிறார்கள் இவர்கள் அனைவரும் நேற்று வேலைக்கு சேர்ந்த ஆண், மற்றும் பெண் போலீசார் இவர்கள் 10 பேர் மின்விசிறி உள்ள பக்கத்தில் ஓரமாக நின்றுகொண்டிருக்கிறார்கள் திருவண்ணாமலை போலீஸ் பொம்மைக்கு காக்கி சட்டை போட்டது போல சின்ன பிள்ளைகள் இருக்கிறார்கள் வயது ஆன கான்ஸ்டாப்பிலே SI , INS யாரும் இல்லை யாரும் ஆரம்பத்தில் வருவது கிடையாது கயிறு கட்டி கொஞ்சம் கொஞ்சமாக மக்களை நிறுத்தி அனுப்பாமல் கிழக்கு கோபுரம் முன் பகுதியில் மின் விசிறி கீயே நிழலில் இருக்கிறார்கள் ஏன் இந்த கொடுமை அரசியல் வாதிகள் ஆன்மிக வாதிகள் இந்து அமைப்பினர் யாரும் கண்டுகொள்ளவில்லையே என்ற வருத்தம்தான் கிழக்கு கோபுர வாயில் உள்ளே சென்று கட்டை கட்டி இருக்கிறார்கள் அதை ஆறு சுற்றுகளாக சுற்றி பின் அங்கிருந்து நேராக சென்று வாந்தி வரும்படியாக கெட்ட மீன் செத்த வாடை இருக்க அனைவரும் மயக்கம், வாந்தி எடுக்கின்றனர் ஏன் இந்த கொடுமை இந்த அத்தி வரதர் சோதனை . உள்ளே பிரகாரம் சென்று கோயிலை நன்றாக சுற்றி விடைபெற்று அங்கிருந்து அத்தி வரதரை பார்க்கும் இடத்தில் ஆச்சரியம் அணைத்து காக்கிகளும் VIP பக்கம் நின்று அங்கு கோபுர வாயில் காற்று மற்றும் மின்விசிறியில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்ன கொடுமை சார் இது அங்கு இருக்கும் காக்கி பெண் போலீஸ் சாமியை பார்க்கும் போது தள்ளிவிடுகின்றனர் இவர்கள் இல்லாமல் மக்களே வரிசையில் செல்கிறார்கள் மொத்தம் 100 போலீஸ் இருக்கும் 90 உள்ளே இருக்கிறார்கள் மீதம் மீசை கூட வராமல் இருக்கும் சின்ன பிள்ளைகை வெளியே இருக்க யாரும் கேட்பார்க்கும் ஆட்கள் இல்லை பாவம் மனிதர்கள் இல்லை அத்தி வரதர் இந்த கொடுமை எல்லாம் பார்க்க வேண்டும் கடைசியில் 6 15 மணிக்கு மாலை அத்தி வரதரை பார்த்தேன் மேலும் 4 பேர் இறந்ததற்கு கரணம் சரியான பாதுகாப்பு இல்லை பச்சையப்பா காலேஜ் NCC வந்திருந்தாலே கூட்ட நெரிசல் கட்டுக்குள் வைத்திருப்பார்கள் காக்கி வேஸ்ட் அத்தி வரதரை பார்க்க முன் பக்க வாயில் இருந்து ஆட்களை நேராக கட்டை கட்டி பின் பக்கம் வாயில் செல்லும் படி செய்து இருக்கலாம் யாரும் அர்ச்சனை கிடையாது காட்சி பொருளாக மட்டுமே அத்தி வரதர் அடுத்த தலைமுறை அதிக மக்களை பார்க்க இயலாது பாவம் அத்தி குளத்திலே இருக்கட்டும் ஆக மொத்தத்தில் 2 மணி நேர பார்க்க வேண்டிய அத்தி 13 மணி நேரமாகிவிட்டது????????யார் காரணம் உள்ளே சுற்றி சுற்றி சுற்றி விடவேண்டிய அவசியமில்லை VIP பார்க்க நேரத்தை வீண் செய்கிறார்கள் குழந்தை வைத்திருந்தவர்கள் பாவம் தான் இனிமேலாவது மக்களுக்கு அத்தி நல்லது செய்வார் என பிராத்திக்கிறேன் குறிப்பு : கலெக்டர், அமைச்சர்கள் ,SP மற்றும் CM நேரில் சென்று பார்க்க வேண்டும் தினமும் 48 நாட்கள் முடிய SP பார்வை இட வேண்டும்.அப்போதுதான் பாதுகாப்பு இருக்கும் நான் பட்ட கஷ்டம் யாரும் படவேண்டாம் அத்தி போற்றி அத்தி வரதர் போற்றி போற்றி போற்றி.......நன்றி
Rate this:
Share this comment
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூலை-201921:17:12 IST Report Abuse
padma rajan இன்றைய தினம் நெரிசலில் நான்கு பக்தர்கள் உயிரிழந்ததாக செய்தி வந்துள்ளது மிகவும் வேதனைக்குரியது இதற்கெல்லாம் காரணம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கு. மேலும் உயிர்ப்பலிகள் அவளை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை உடனே செய்ய வேண்டும். ஒரே வழி 48 நாட்களுக்கு பதிலாக மூன்று மண்டலங்கள் வரை தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்வது நல்லது. இன்னும் குறுகிய நாட்களே இருப்பதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Shan, Ngl -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூலை-201919:17:45 IST Report Abuse
Shan, Ngl "விஸ்வகர்மா" இனத்தால் இன்று வரை வாழ்ந்துஅருள் பாவித்து வரும்"அத்திவரதர்"-வியப்பாக இருக்கிறது அல்லவா...?ஆயிரம் பழங் கதைகள் உண்டதற்குஉண்மைகள் யாதெனில்......சுக்கிரனுக்கு ஒப்பாக கூறப்படும்அத்திமரப் பால் முதல் பட்டை வரைஅத்தனையும் வரங்களே!பெரும்பாலும் நீர் நிலைகள் அருகில் வளரும் அத்திமரத்தில்சிற்பம் செய்வது விந்தையானது!மிகப்பெரிய சிற்பங்கள் பெரும்பாலும் பளிங்குக் கற்களில் இருந்த நிலையில்உஷ்ணம் வெளிகாட்டும்அத்திமரத்தில் "வரதராஜர்" சிலை வடிப்பது மிகச் சவலான பணி!அத்திமரத்தில் மூலவர் "வரதராஜர்"சிலை வடித்ததோடு மட்டுமன்றி "வரதர்"நின்றால் - "வெங்கடாஜலபதி"படுத்திருந்தால் - "மகாவிஷ்ணு"எனும் 3 D சிற்பத்தை அந்நாளிலேயே செதுக்கிசாதனை படைத்தவர்கள் எங்கள் "விஸ்வகர்மா" முன்னோர்கள்!மிகவும் முக்கிய குறிப்பு:கொள்ளையடிக்க வந்தமொகலாயர்களின் காஞ்சிபுரம் கோயில் படையெடுப்பில்காணாமல் போனஒட்டுமொத்த கோயிலின் நகைகள் சிற்பங்களுக்கு இடையில்"அத்திவரதரை" மட்டும் அனந்த சரஷ் - குளத்தில் மறைத்துகாத்து நிருத்திய பெருமை(நீருக்குள் மரச்சிற்பம் மூழ்க இயலுமா..?சாதித்து காட்டிய பெருமையும்)"விஸ்வகர்மா" இன மக்களுக்கே உண்டு!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X