ஓட்டெடுப்பு தோற்கும்: எடி போட்டார் வெடி

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement
Kumarasamy, yedurappa,குமாரசாமி, எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வியடையும் என பா.ஜ.,மாநில தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.


கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று (ஜூலை 18) நடக்கிறது. இதற்காக சட்டசபை வந்த பா.ஜ. மாநில தலைவர் எடியூரப்பா கூறியதாவது:
எங்களுக்கு 101 சதவீத நம்பிக்கை உள்ளது.ஆளுங்கட்சியின் பலம் 100க்கு கீழ் உள்ளது. எங்களுக்கு 105 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குமாரசாமி அரசு மீதான தீர்மானம் தோற்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.


இதனிடையே, கர்நாடக சட்டசபை வளாகம் மற்றும் 2 கி.மீ., சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காங்., கட்சியில் ராஜினாமா செய்த 16 அதிருப்தி எம்எல்ஏ.,க்களில் ஒருவரான ராமலிங்க ரெட்டி, நேற்று (ஜூலை 17) மாலை தனது ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக கூறி இருந்தது குறிப்படத்தக்கது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூலை-201923:55:15 IST Report Abuse
s.sivarajan கர்நாடக மக்களுக்கு இப்போ ரெண்டு வாய்ப்புக்கள் இருக்கு தூக்குபோட்டு சாவதா அல்லது விஷம் குடித்து சாவதா ?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஜூலை-201921:21:25 IST Report Abuse
RajanRajan கர்நாடகாவில் ஆளாளுக்கு நல்லா ஜனநாயகத்தின் வேட்டியை புடிச்சு உருவி விடுறானுங்க என்பது மட்டும் தான் உண்மை.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-ஜூலை-201916:36:14 IST Report Abuse
Pugazh V தளபதியை இதில் ஏன் சம்பந்தப்படுத்தி எழுதியுள்ளார்? பலரும் தளபதி நினைப்பில் தூக்கம் வராம தவிக்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X