ஓட்டெடுப்பு தோற்கும்: எடி போட்டார் வெடி| Dinamalar

ஓட்டெடுப்பு தோற்கும்: எடி போட்டார் வெடி

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (35)
Kumarasamy, yedurappa,குமாரசாமி, எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வியடையும் என பா.ஜ.,மாநில தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.


கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று (ஜூலை 18) நடக்கிறது. இதற்காக சட்டசபை வந்த பா.ஜ. மாநில தலைவர் எடியூரப்பா கூறியதாவது:
எங்களுக்கு 101 சதவீத நம்பிக்கை உள்ளது.ஆளுங்கட்சியின் பலம் 100க்கு கீழ் உள்ளது. எங்களுக்கு 105 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குமாரசாமி அரசு மீதான தீர்மானம் தோற்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.


இதனிடையே, கர்நாடக சட்டசபை வளாகம் மற்றும் 2 கி.மீ., சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காங்., கட்சியில் ராஜினாமா செய்த 16 அதிருப்தி எம்எல்ஏ.,க்களில் ஒருவரான ராமலிங்க ரெட்டி, நேற்று (ஜூலை 17) மாலை தனது ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக கூறி இருந்தது குறிப்படத்தக்கது.




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X