அயோத்தி வழக்கு: சமரச குழு அறிக்கை | Dinamalar

அயோத்தி வழக்கு: சமரச குழு அறிக்கை

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (2)
Share
அயோத்தி, சுப்ரீம் கோர்ட், Ayodhya, supreme court, mediation,

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ,சுப்ரீம் கோர்ட் நியமித்த 3 பேர் சமரச குழு தனது அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து, வழக்கு ஆக.,2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தின், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக, அலகாபாத் ஐகோர்ட், 2010ல் தீர்ப்பு அளித்தது. சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிரோமி அகாரா மற்றும் ராம் லல்லா அமைப்புகள் சரிசமமாக பிரித்துக் கொள்ளலாம் என, தீர்ப்பில் கூறப்பட்டது.
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், 14 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த, அரசியல் சாசன அமர்வு, இந்த பிரச்னையில் பேச்சு நடத்தி, சமரசம் ஏற்படுத்துவதற்காக, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் தலைவர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர், ஸ்ரீராம் பஞ்சு இடம்பெற்ற சமரச குழுவை நியமித்திருந்தது. கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, 18 ம் தேதிக்குள்(இன்று) அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


latest tamil news




வழக்கு இன்று(ஜூலை 18) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சமரச குழு அறிக்கையை தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில், வழக்கு விசாரணையை ஆக.2ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், ஜூலை 31ம் தேதி வரை சமரச குழு பணியை தொடரவும், முடிவுகளை ஆக., 1ம் தேதி தெரிவிக்கும்படியும் கூறினார். சமரச குழுவின் அறிக்கை ரகசியமாக வைக்கப்படும் எனக்கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X