அரசியல் செய்தி

தமிழ்நாடு

தென்காசி, செங்கல்பட்டு புது மாவட்டங்கள்

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (33)
Advertisement
தென்காசி, செங்கல்பட்டு, மாவட்டம், சட்டசபை, முதல்வர், இ.பி.எஸ்.,

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியையும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டையும் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். இரண்டு மாவட்டங்களுக்கும் தனி ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கபடுவர் எனவும் கூறியுள்ளார்.

சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.






கடந்த சில மாதங்களுக்கு முன்னர், விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புது மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

110வது விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட சில அறிவிப்பில்,
* விழுப்புரம் நகராட்சி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.50 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்
* ரூ.20 கோடியில் ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்படும் எனக்கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
19-ஜூலை-201922:10:45 IST Report Abuse
Mahendran TC வேலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து , திருப்பத்தூரை தனிமாவட்டமாக ஆக்குவோம் என்ற திமுக, அதிமுகவின் கோரிக்கை என்ன ஆனது ? வோட்டு கேட்டு வரும்போது மட்டும் இந்த வாக்குறுதியை அள்ளிவீசுறானுங்க , ஆனால் இதுவரை திருப்பத்தூர் தனிமாவட்ட அந்தஸ்து பெறவில்லை .
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
18-ஜூலை-201921:49:57 IST Report Abuse
Girija ஒருபக்கம் மோடி டிஜிட்டல் வர்த்தகம் நெட்வொர்க்கிங் என்று பேசுகிறார், அவர் கூட்டணி இப்படி தொகுதிகளை மாவட்டம் ஆக்குகிறது. கணிப்பொறி இன்டெகிரஷன் மூலம் 34 மாவட்டங்களை பாதியாக குறைத்து அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். இந்த பேப்பர் போர்டு போக்குவரத்து போன்ற அரசு நிறுவனங்களுக்கு டி ஜி பி அந்தஸ்தில் அதிகாரி தேவையா? அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை பாதி பேர் அலுவலகம் வருவதில்லை , அவர் ஆபீஸ் இல் வழிப்பார்க்கும் பணியாளர்களுக்கு ஆபீஸ் பால்வாடி பள்ளி மாதிரி, ஆண்கள் அருகில் உள்ள டாஸ்மாக் இல் தண்ணி போலீஸ் என்ற பந்தாவோடு கேன்டீனில் ஓசி தீனி
Rate this:
Share this comment
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூலை-201921:11:32 IST Report Abuse
rajan நான் சிறிது காலம் செங்கல்பட்டில் இருந்தவன். அந்த ஊர் மாவட்டத் தலைநகரமாக இருப்பதற்கே அருகதையற்றது. நல்ல சாலைகள் கிடையாது குடிதண்ணீர் கிடையாது . போர் போட்டால் உப்பு நீர் தான் கிடைக்கும். பேருந்து நிலையம் ஒரே மூத்திர காடு. பேருந்து நிலையம் பக்கத்திலேயே பக்கத்திலேயே டாஸ்மார்க் குடிகாரர்களின் தொல்லை ஷேர் ஆட்டோக்களின் அட்டகாசம் நடப்பதற்கு நடைபாதையை கிடையாது. வேதாச்சலம் நகர் சாலைகள்கற்கள் பெயர்ந்து சைக்கிள் கூட சொல்ல முடியாது அந்த அளவுக்கு ஒரு மோசமான பராமரிப்பு. இப்பொழுதும் அதே நிலைதான். பலத்த மழை பெய்தால் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து ஜிஎஸ்டி ரோட்டில் ஆறாக ஓடும் அதில்தான் மக்கள் நடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மாவட்ட தலைநகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி நல்ல சாலைகள் அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பின்பு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X