சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியையும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டையும் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். இரண்டு மாவட்டங்களுக்கும் தனி ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கபடுவர் எனவும் கூறியுள்ளார்.
சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புது மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
110வது விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட சில அறிவிப்பில்,
* விழுப்புரம் நகராட்சி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.50 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்
* ரூ.20 கோடியில் ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்படும் எனக்கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE