தீர்ந்தது தகராறு: தமிழை தழுவியது சுப்ரீம் கோர்ட்

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (75)
Advertisement

புதுடில்லி : வரலாற்றில் முதல் முறையாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விபரங்கள் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.





சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விபரங்கள் வெளியிடப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம் பெறாமல் இருந்தது பெரும் சர்ச்சையாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 18) 113 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு விபரங்கள், சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் 9 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. 113 வழக்குகளின் தீர்ப்பு பட்டியலில் 98 மற்றும் 99 இடங்களில் தமிழக வழக்கின் தீர்ப்பு, தமிழிலில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.




சரவண பவன் உரிமையாளர் ராஜபாலன், கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது மார்ச் 29 ம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவு மற்றும் நீலகிரியை சேர்ந்த ஜோசப் ஈஸ்வரன் வாப்ஷேரின் சொத்துக்கள் தொடர்பாக அவரது வாரிகள் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு ஆகிய 2 வழக்குகளில் தீர்ப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளதை தமிழக வழக்கறிஞர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஜூலை-201906:03:02 IST Report Abuse
meenakshisundaram 'தமிழ் என்ன தாடியா ?அதை வளர்க்க 'என்று சொன்னவர் வாலி .அது தானா வளரும்
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஜூலை-201908:47:15 IST Report Abuse
Nallavan Nallavanஅப்படிச் சொன்ன வாலிதான் தமிழை தாங்கள் வளர்ப்பிப்பதாகக் கூறியவர்கள் காலடியில் விழுந்து கிடந்தார் ........
Rate this:
Share this comment
Cancel
மெய்கண்டான் - Chennai,இந்தியா
19-ஜூலை-201904:23:12 IST Report Abuse
மெய்கண்டான் நான் மறுபடியும் சொல்கின்றேன், தமிழை யாரும் வாழவைக்க வேண்டியதில்லை அது தானாகவே வாழும் தமிழால் தான் நாம், நம்மால் என்றும் தமிழ் இல்லை இதற்காக யானையை விழுங்கி பூனையை காத்து நடிக்கும் தமிழக 'தமிழ் மொழி' வியாபாரிகளுக்கு கொடி பிடிக்கவேண்டியது இல்லை ஏனென்றால் தெருவுக்கு தெரு ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளை தொடங்கி கல்லா கட்டுபவர்களும் அவர்கள் தான்.
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூலை-201904:15:50 IST Report Abuse
Babu பயன் கிடைக்குமென்றால் வீடு, நாடு, சொந்த சனம், தாய், தாய்மண், தாய்ப்பால் என எல்லாவற்றையும் விற்கும் (அ) கமிஷன் பார்க்கும் கூட்டம் இப்போது வந்து கேட்கும் என்ன பயன் என்று? அந்த கேள்விகளின் திமிர்த்தனம் உணர்த்தும் தமிழனின், தமிழ்நாட்டின் அடிமை நிலையை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X