பொது செய்தி

இந்தியா

வீட்டு மெத்தையில் ஓய்வெடுத்த புலி

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement

புதுடில்லி : அசாமில் வெள்ளத்தில் தப்பி, ஊருக்குள் வந்த புலி ஒன்று, வீடு ஒன்றில் மெத்தை மீது படுத்து, ஓய்வுவெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





அசாமில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 67 பேர் பலியாகி உள்ளனர். ஏறக்குறைய 64 லட்சம் பேர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக புகழ்பெற்ற காசிரங்கா தேசிய விலங்கியல் பூங்காவிற்குள் வெள்ளநீர் புகுந்ததில் ஏராளமான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. பல விலங்குகள் வெள்ளத்தில் தப்பி, வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளன.





வெள்ளத்தில் தப்பிய புலி ஒன்று, தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்துள்ளது. அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லை. வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வந்து போது, வீட்டிற்குள் மெத்தை மீது ஏதோ அசைவு தெரிந்துள்ளது. சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர், வெளியில் இருந்த இடைவெளி வழியாக பார்த்த போது, மெத்தை மீது புலி படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து புலியை வெளியேற்றி, பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அதற்குள் மெத்தையில் படுத்து புலி ஓய்வு எடுத்ததை வெளியில் இருந்து போட்டோ எடுத்தவர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Sekar - mumbai ,இந்தியா
19-ஜூலை-201901:33:23 IST Report Abuse
Ram Sekar ஸ்டைலும்மா...வாவ்
Rate this:
Share this comment
Cancel
18-ஜூலை-201916:31:47 IST Report Abuse
நக்கல் அது விடுதலை தேடி வந்த விடுதலைப்புலி...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஜூலை-201915:56:51 IST Report Abuse
Nallavan Nallavan அள்ளாதே முத்தை ..... மெத்தையில் தத்தை ..... காட்டுதே வித்தை .....
Rate this:
Share this comment
kettavan - Glass,பெல்ஜியம்
19-ஜூலை-201908:25:41 IST Report Abuse
kettavanநீ ஒரு மொக்கை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X