கர்நாடக சட்டசபை நாளைக்கு ஒத்திவைப்பு

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (40)
Advertisement

பெங்களூரு : கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதாக கூறி, விவாதிப்பதிலேயே காலத்தை கடத்தி, ஓட்டெடுப்பை இழுத்தடிப்பதாக பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது. மாலை வரை நடந்த விவாவத்தை தொடர்ந்து இன்று ஓட்டெடுப்பு ஏதும் நடக்கவில்லை. சபையை நாளைக்கு (19ம் தேதி ) ஒத்தி வைத்தார் சபாநாயகர்.






குமாரசாமி அரசு மீது இன்று (ஜூலை 18) காலை 11 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கர்நாடக எம்எல்ஏ.,க்கள் சட்டசபைக்கு வந்தனர். மும்பையில் தங்கி இருக்கும் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க போவதில்லை என ஏற்கனவே அறிவித்த நிலையில், காங்., கட்சியை சேர்ந்த மேலும் 2 எம்எல்ஏ.,க்களும், ஆதரவு எம்எல்ஏ ஒருவரும் அவைக்கு வரவில்லை.





அவை துவங்கியதும் பேச துவங்கிய எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, விவாதத்தை உடனடியாக முடித்து இன்றைக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை ஏற்க மறுத்த சபாநாயகர் ரமேஷ்குமார், முதல்வர் குமாரசாமியும், அவரை தொடர்ந்து முன்னாள் முதல்வரும் காங்., தலைவருமான சித்தராமைய்யாவும் நீண்ட நேரம் உரையாற்ற அனுமதி அளித்தார்.





சித்தராமைய்யா பேசுகையில் வாய் தவறி, தன்னை எதிர்க்கட்சி தலைவர் என குறிப்பிட்டார். இதனை பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் விமர்சித்ததை அடுத்து உடனடியாக தவறை திருத்தி, காங்., தலைவர் என்று தன்னை குறிப்பிட்டார். காங்., மற்றும் மஜத எம்எல்ஏ.,க்கள் மாறி மாறி பேசி நேரத்தை கடத்தியதால், பொறுமை இழந்த பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை, பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
மீண்டும் அவை கூடிய போது காங்.,ன் சிவக்குமார், தங்கள் கட்சி எம்எல்ஏ., பட்டேலை பா.ஜ., கடத்தி விட்டதாக கூறி, அதற்கான போட்டோ ஆதாரங்களை காட்டினார். இரவு 8 மணி வரை எங்களுடன் இருந்த எம்எல்ஏ.,வை பா.ஜ., கடத்தி, மும்பை கொண்டு சென்றது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவையில் காரசார விவாதம் நடந்தது. அப்போது குறுக்கிட்ட சித்தராமைய்யா, நம்பிக்கை ஓட்டெடுப்பை ஒத்திவைக்கும்படி கேட்டார். இதனால் அரசு வேண்டுமென்றே நம்பிக்கை ஓட்டெடுப்பை தாமதப்படுத்துவதாகவும், இந்த விவகாரத்தில் கவர்னர் தலையிட வேண்டும் எனவும் பா.ஜ., கேட்டுள்ளது. கவர்னரை சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்கவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது.





இன்றும், நாளையும் விவாதம் நடத்தி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதை தாமதப்படுத்தினால், அடுத்து சனி,ஞாயிறு விடுமுறை காரணமாக சட்டசபை கிடையாது. மீண்டும் திங்கள்கிழமை அவை கூடுவதற்குள் அதிருப்தி எம்எல்ஏ.,க்களை சமாதானப்படுத்தி அழைத்து வந்து, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, ஆட்சியை காப்பாற்றி விடலாம் என காங்., மற்றும் மஜத கட்சிகள் திட்டமிடுவதாக பா.ஜ., வட்டாரங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.


முதல்வருக்கு கவர்னர் கடிதம்



இந்நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு கவர்னர் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: நாளை மதியம் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
18-ஜூலை-201922:15:35 IST Report Abuse
S.BASKARAN தற் போதிய அரசும் சபாநாயகரும் கர்நாடக மக்களை கேலி கூத்தடிகளாக நினைத்துவிட்டார்கள் போலும்.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
18-ஜூலை-201920:45:53 IST Report Abuse
தாண்டவக்கோன் ஒருத்தனுக்கு 70 வயசுல பதவிவெறி கண்ண மறைக்கிது , ஊழலப்பனுக்கு 70 வயசுல பதவிவெறி பாடாப்படுத்துது
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
19-ஜூலை-201910:06:46 IST Report Abuse
Chowkidar NandaIndiaஒருத்தர் இங்கே 87 வயதில் முதல்வராக வலம் வந்தாரே. அதற்கு பெயர் பதவிவெறியா இல்லை வேறு ஏதாவதா?...
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
18-ஜூலை-201920:41:13 IST Report Abuse
தாண்டவக்கோன் எடியூரப்பா..., எட்டாக்கனியப்பா😖😖😖
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X