வேலூர் தேர்தல்: மனுத்தாக்கல் நிறைவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலூர் தேர்தல்: மனுத்தாக்கல் நிறைவு

Added : ஜூலை 18, 2019

சென்னை : பணபட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் லோக்சபா தேர்தல், ஆக.,5 ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 11 ம் தேதி துவங்கியது. இதுவரை அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அமமுக, மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் போட்டியிடவில்லை.
இந்நிலையில் வேலூர் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜூலை 18) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. நாளை (ஜூலை 19) வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X