அரசியலில் பிரியங்கா: வர விரும்பிய மண்டேலா

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement

புதுடில்லி : தான் அரசியலுக்கு வந்து, ஏதாவது சாதிக்க வேண்டும் என தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சல் மண்டேலா விரும்பியதாக காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.latest tamil newsநெல்சல் மண்டேலாவின் 101 வது பிறந்தநாளை நினைவு கூர்ந்து, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார் பிரியங்கா. அதில் மண்டேலாவை 'அங்கிள்' என குறிப்பிட்டிருந்த பிரியங்கா, மண்டேலா எனக்கு உத்வேகமாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். மற்றவர்களை விட நான் ஏதாவது செய்ய வேண்டும் என என்னிடம் கூறினார் என குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news


காங்., கட்சியின் புதிய தலைவராக பிரியங்கா நியமிக்கப்படலாம் எனவும், அவரை தலைவராக்க கட்சி தலைவர்கள் பலரும் அவரின் பெயரை பரிந்துரைத்து வரும் நிலையில் பிரியங்காவின் இந்த டுவிட்டர் பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தான் அரசியலுக்கு வந்த போது, நெல்சல் மண்டேலா தன்னிடம் கூறியதை எந்த இடத்திலும் குறிப்பிடாத பிரியங்கா, தலைமை பொறுப்பிற்கு அவரது பெயர் பேசப்படும் போது எதற்காக கூறி உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரியங்கா, கட்சி தலைவராக நியமிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்பதையே இந்த பதிவு காட்டுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rm -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூலை-201912:06:57 IST Report Abuse
rm she has all rights to become a politician. she is educated,talented.
Rate this:
Ganesh - chennai,இந்தியா
19-ஜூலை-201914:29:20 IST Report Abuse
GaneshMost important qualification you forgot to mention is that she is has surname "Gandhi"....
Rate this:
Cancel
anand - Chennai,இந்தியா
19-ஜூலை-201909:45:03 IST Report Abuse
anand காந்தி, காமராஜர் எல்லாம் சொல்லலையா மேடம்?
Rate this:
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூலை-201909:09:48 IST Report Abuse
sekar ng அடுத்து உங்கள் பிள்ளைகள் தான் காங்கிரஸ் வாரிசு கவலை வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X