கர்நாடக சட்டசபையில் பா.ஜ.,எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (10)
Advertisement

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தாமல் சபையை ஒத்திவைத்ததை பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் ஏற்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் சபையில் இருந்து செல்ல மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


குமாரசாமி அரசு மீது இன்று (ஜூலை 18) காலை 11 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கர்நாடக எம்எல்ஏ.,க்கள் சட்டசபைக்கு வந்தனர். மும்பையில் தங்கி இருக்கும் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க போவதில்லை என ஏற்கனவே அறிவித்த நிலையில், காங்., கட்சியை சேர்ந்த மேலும் 2 எம்எல்ஏ.,க்களும், ஆதரவு எம்எல்ஏ ஒருவரும் அவைக்கு வரவில்லை.
அவை துவங்கியதும் பேச துவங்கிய எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, விவாதத்தை உடனடியாக முடித்து இன்றைக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை ஏற்க மறுத்த சபாநாயகர் ரமேஷ்குமார், முதல்வர் குமாரசாமியும், அவரை தொடர்ந்து முன்னாள் முதல்வரும் காங்., தலைவருமான சித்தராமைய்யாவும் நீண்ட நேரம் உரையாற்ற அனுமதி அளித்தார்.
இதற்கிடையில் இன்றே ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என மாநில கவர்னர் சபாநாயகரை கேட்டு கொண்டார். ஆனால் இதனை அவர் ஏற்க மறுத்து விட்டார். இன்று மாலை வரை விவாதம் நடந்தது. சபையை நாளைக்கு (19ம் தேதி) ஒத்திவைப்பதாக சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.


சபைக்குள் தூங்க போவதாக


இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சபையில் இருந்து வெளியேற மறுத்து விட்டனர். சபைக்குள் தூங்க போவதாக பா.ஜ., தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். இதனால் அவையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meiyur Adhi Varadarajan - chennai,இந்தியா
18-ஜூலை-201922:54:00 IST Report Abuse
Meiyur Adhi Varadarajan i am very much when Governor advise to take a motion today itself how can be speaker extend the date tomorrow. i am very much surprise to see this kind of action. If you are a number let you approve and stay there otherwise resign walk out assembly and try to meet the people and come with full majority and run the show. when you are not the number why you want to stay ? this kind of action should be stopped and Governor should come with power and advise or high court has to intervene. it is better to go for election and show your strength.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-ஜூலை-201921:40:35 IST Report Abuse
Pugazh V க.பெட்டி சு பையா சொல்வது சரி தான். பாஜக குடுத்த அளவுக்கு யாரும் குடுக்க முடியாது தான்
Rate this:
Share this comment
Cancel
sivan - Palani,இந்தியா
18-ஜூலை-201921:36:06 IST Report Abuse
sivan எனக்கென்னவோ எடியூரப்பா போன்ற ஊழல்வாதிகள் தலைமையில் ஒரு ஆட்சி அமைவது பிடிக்கவில்லை அது பிஜேபி ஆட்சியாக இருந்தாலும் கூட அது நாட்டுக்கு நல்லது அல்ல. என்னவோ அவர்கள் மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். நாம் சொல்ல என்ன இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X