தாவூத் இப்ராஹிம் தம்பி மகன் கைது| Mumbai Police arrests underworld don Dawood Ibrahim's nephew Rizwan Kaskar | Dinamalar

தாவூத் இப்ராஹிம் தம்பி மகன் கைது

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (3)
Share
 தாவூத் இப்ராஹிம், தம்பி, மகன், கைது

புதுடில்லி: மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமின் தம்பி மகன் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1993-ல் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் பதுங்கி உள்ளார்.இந்நிலையில் தாவூத் இப்ராஹிமின் கும்பலை சேர்ந்த பாஹிம் என்பவரின் உதவியாளர் அகமதுராசா வதாரியா என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே அவருடன் தொடர்பில் இருந்தவரும் தாவூத் இப்ராஹிமின் தம்பி இக்பால் கஸ்கரின் மகனுமான ரிஸ்வான் கைது செய்யப்பட்டார். இவர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சி செய்யும் போது கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X