அரசியல் செய்தி

தமிழ்நாடு

பத்திரிகையாளர் நல வாரியம்: ஆராய குழு அமைக்க முடிவு

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:''பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது தொடர்பாக, சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க, குழு அமைக்கப்படும். குழு அறிக்கை அடிப்படையில், பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்,'' என, செய்தித் துறை அமைச்சர், ராஜு தெரிவித்தார்.சட்டசபையில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வன் பேசுகையில், ''பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்,'' என
 பத்திரிகையாளர் நல வாரியம்: ஆராய குழு அமைக்க முடிவு

சென்னை:''பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது தொடர்பாக, சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க, குழு அமைக்கப்படும். குழு அறிக்கை அடிப்படையில், பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்,'' என, செய்தித் துறை அமைச்சர், ராஜு தெரிவித்தார்.
சட்டசபையில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வன் பேசுகையில், ''பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்,'' என வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்து, அமைச்சர் ராஜு கூறியதாவது: பத்திரிகையாளர் நலனில், ஜெ., அரசு அக்கறை கொண்டுள்ளது. பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், நல வாரியம் அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


latest tamil news


பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைப்பது தொடர்பாக, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க, நிதித்துறை முதன்மை செயலர் தலைமையில், குழு அமைக்கப்படும். குழு செயலராக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் இருப்பார். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர், தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர், உறுப்பினர்களாக இருப்பர்.
இக்குழு, பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது குறித்து, அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து, அறிக்கை அளிக்கும். அந்த அறிக்கை அடிப்படையில், பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூலை-201914:04:24 IST Report Abuse
நக்கல் இன்றைய தேதியில் கட்சி சார்ந்த ஊடகங்களே அதிகம்... அதுவே ஒரு கேவலமான பிழைப்பு... இதுக்கு நல வாரியம் வேற கேடா?? செய்தி ஊடகங்கள், பத்திரிகைகள் இல்லாமல் இருந்தாலே நாடு நிம்மதியாக இருக்கும்..
Rate this:
Cancel
RR Iyengar - Bangalore,இந்தியா
19-ஜூலை-201908:04:57 IST Report Abuse
RR Iyengar அதான் வாடிகன் "புண்ணியத்துல" சுடலையோட "கருணை"ல சொந்த அச்சகம் நடத்துற அளவுக்கு செழிப்பா இருக்கீங்களே அப்புறம் எதுக்கு நலவாரியம் ... ஓ சீன்போடவா ... ஓகே ஓகே
Rate this:
Cancel
Meiyur Adhi Varadarajan - chennai,இந்தியா
18-ஜூலை-201923:48:57 IST Report Abuse
Meiyur Adhi Varadarajan my simple question to those looking for separate body for press people - how you are going to a good people as per my opinion none of the people or most of people are always one sided and not at all covering all the good thing and most of reports are arranged one. when you are going to change the society first you must change from your circle.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X