பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் தரிசனம்: உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement
அத்திவரதர், தரிசிப்பு, உயிரிழந்த, பக்தர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி

சென்னை:காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்று உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அத்திவரதர் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதால் எதிர்பாராத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் செல்கின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்ளிட்ட நான்குபேர் உயிரிழந்தனர். இதனையடுத்து சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:எதிர்பாராத அளவிற்கு கூட்டம் உள்ளது. கர்ப்பிணிகள், முதியோருக்கு சிறப்பு வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரிசையில் நிற்பவர்களுக்கு பந்தல் ஏற்பாடு, மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. திருவோண நட்சத்திரத்தில் 1.70 லட்சம் பேர் தரிசனம் செய்து உள்ளனர். கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesaperumal - sivakasi,இந்தியா
19-ஜூலை-201908:28:37 IST Report Abuse
venkatesaperumal அத்திவரத ஸ்வாமியை வைத்து உண்டியலை நிரப்பும் அறமற்ற அறநிலை துறை நீதிமன்ற தீர்ப்புப்படி காஞ்சி வரதராஜ கோவிலிருந்து வெளியேற வேண்டும் , ஹிந்து பக்தர்களால் நிரம்பிய காணிக்கை , ஹிந்துக்களின் கோயிலுக்கும் , பாதிக்க பட்ட குடும்பத்திற்கு 5 லட்சம் கொடுத்து உதவ வேண்டும் . சாராயம் குடித்து சாபவனுக்கு 3 -5 லட்சம் தரும் அரசு பக்தர்களின் சாவுக்கு 1 லட்சம் தான் தரமுடிந்ததா ??
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
19-ஜூலை-201908:04:50 IST Report Abuse
arudra1951 செத்தால் காசுகொடுக்கும் சீதக்காதி வள்ளலோ ?
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
19-ஜூலை-201904:19:13 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அவர் இருக்கும் குளத்தை க்ளீன் செய்தால் எவ்ளோ நன்னாயிருக்கும் செய்வாளோ ??????????அறநிலைத்துறையிலே .நெக்ஸ்ட் நாற்பது வருஷம்களுக்கு பார்க்கமுடியாது உண்மையைத்தான் சொல்றாங்கா எவ்ளோபெருங்க உண்மையான பக்தர்கள் ஒரு ரௌடி ஸ்லேஷாலாவந்து சேவிக்கறான் vip யா அவன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X