அத்திவரதர் தரிசனம்: உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் தரிசனம்: உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (5)
அத்திவரதர், தரிசிப்பு, உயிரிழந்த, பக்தர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி

சென்னை:காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்று உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அத்திவரதர் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதால் எதிர்பாராத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் செல்கின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்ளிட்ட நான்குபேர் உயிரிழந்தனர். இதனையடுத்து சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:எதிர்பாராத அளவிற்கு கூட்டம் உள்ளது. கர்ப்பிணிகள், முதியோருக்கு சிறப்பு வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரிசையில் நிற்பவர்களுக்கு பந்தல் ஏற்பாடு, மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. திருவோண நட்சத்திரத்தில் 1.70 லட்சம் பேர் தரிசனம் செய்து உள்ளனர். கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X