சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

பத்திரிகை செய்தி: 'புதிதாக, 2,000 பஸ்கள், இந்த ஆண்டு, 600 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.

டவுட் தனபாலு: இந்த அறிவிப்பைப் பார்த்து, மகிழ்ச்சி அடைவதா... இல்லை, 'எங்களின் ஓய்வூதிப் பலன்களை முழுமையாக கொடுக்க முடியாவிட்டால், ஆளுக்கொரு, புது பேருந்தை வழங்கிட உத்தரவிட வேண்டும்'னு, போக்குவரத்து தொழிலார்கள், நீதிமன்றத்தின் கதவைத் தட்டி இருக்காங்களே, அதை நினைத்து வேதனைப்படுவதா... இது, பெரும், 'டவுட்'டாகவே இருக்கு...!


பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: இந்தியாவை, உலகின் மது இல்லாத, முதல் நாடாக மாற்ற, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டவுட் தனபாலு: 'எவ்வளவோ போராட்டிட்டோம்... மதுவிலக்கு குறித்து, தமிழக அரசு காதில் வாங்கிக்காது' என்ற முடிவுக்கு வந்துட்டீங்களா... இல்லை, உட்கட்சியில் எவ்வளவோ எதிர்ப்பை மீறி, உங்க அன்பு மகனை எம்.பி.,யாக்கி அழகு பார்த்தவர்களுக்கு, எதற்கு சங்கடத்தை தரணும்கற முடிவுக்கு வந்துட்டீங்களா... அதனால் தான், மத்திய அரசிடம் கோரிக்கையை நீட்டுறீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

வேலுார் தொகுதி அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர், ஏ.சி.சண்முகம்: கடந்த முறை செய்த அதே தவறை, மீண்டும், தி.மு.க.,வினர் செய்கின்றனர். இப்போது, 60 இடங்களில், பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

டவுட் தனபாலு: புலம்பி என்ன ஆகப்போகுது... கடந்த முறையைப் போலவே, இந்த முறையும் தேர்தலை ரத்து செய்வாங்க... சில மாதம் கழித்து, மீண்டும் தேர்தல் தேதி அறிவிப்பாங்க... அப்பவும், இதே வேட்பாளர் தான் களமிறங்குவாரு; அதே பாணியில் தான், தேர்தல் வியூகம் வகுப்பாரு... போனதடவை ரத்து செய்தபோது, கண்ணீர் விட்டீங்களே... அதனால் என்ன மாற்றம் வந்தது என்பதை யோசித்தீங்களா... எல்லாம் விதிப்படி நடக்கும்னு, மனசைத் தேற்றுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-ஜூலை-201918:33:26 IST Report Abuse
D.Ambujavalli பேசாமல் வேலூர் தொகுதியை 'தியாகம்' செய்துவிட்டு, உள்ளதையாவது காப்பாற்றிக்கொண்டு இருந்திருக்கலாம் வீம்பு, வரப்போகும் அமைச்சர் பட்டாளத்துக்கு 'விருந்தோம்பியே' இருக்கும் ஒன்று அரையும் கரைந்து முழு போண்டியானபின் இவர் எம் பி ஆகி என்னத்தை வாரிக்கட்டைப் போகிறார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X