சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'உங்களுடைய தேசத் துரோக வழக்கு தண்டனையை விட, இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என, யாராவது கேட்டால் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ பேட்டி: தமிழக அரசின், 'நீட்' தடை மசோதாவை நிராகரித்ததாக, மத்திய அரசு, இரு ஆண்டுகளுக்கு முன்பே கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் இதை, இ.பி.எஸ்., அரசு, இரு ஆண்டுகளாக மறுத்து வந்துள்ளது. இதை மறைத்தது, பெரிய மோசடி. இதைவிட பெரிய நம்பிக்கை துரோகம் எதுவுமில்லை. ஏழரை கோடி மக்களை ஏமாற்றிய, இ.பி.எஸ்., முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் பதவிக்கு தகுதியில்லாத அவர் மீது, கிரிமினல் வழக்கு பதிந்து, கூண்டில் நிறுத்த வேண்டும்.


பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் அறிக்கை: இந்தியா என்பது, ஒற்றை நாடு அல்ல; அது, பல்வேறு மொழிகள் பேசும், பல்வேறு கலாசாரங்களைக் கடைபிடிக்கும் மக்களைக் கொண்ட நிலப்பகுதிகளின் ஒன்றியம். இதை உணர்ந்து, மத்திய அரசு செயல்பட்டால் தான், அமைதியும், ஒற்றுமையும் பெருகும் என்பதை, ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.


தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., பழனி மாணிக்கம் பேச்சு: நாட்டில் மற்ற தொழில்களைக் காட்டிலும், விவசாயம் பின்தங்கி விட்டது. முன்பு, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாகக் கூறிய, பா.ஜ., மீண்டும் அதே வாக்குறுதியை, இப்போதும் தந்துள்ளது. அவர்களின் வாக்குறுதிக்கும், செயலுக்கும், மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. அடுத்த தேர்தலிலும், அவர்கள் இதே வாக்குறுதியைத் தான் கூறப் போகின்றனர் என்பதை, என்னால் உறுதியாகக் கூற முடியும்.


தெற்கு ரயில்வே மஸ்துார் தொழிற்சங்க மாநில தலைவர், ராஜா ஸ்ரீதரன் பேட்டி: தமிழக ரயில்வே துறையில், வடமாநிலத்தவர் ஆதிக்கம் இல்லை. இந்திய அளவில் ரயில்வே தேர்வுகள் நடக்கும் போது, அடுத்த மாநிலத்தவர், பணிக்கு வருவதை தடுக்க முடியாது. அந்தந்த மாநிலத்தவர்களுக்கு, ரயில்வே பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, சட்டம் ஏதும் இல்லை. கன்னடர், தெலுங்கர், வடமாநிலத்தவர், மலையாளி என, யாராக இருந்தாலும், ரயில்வேயில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதே, எங்கள் கோரிக்கை

.காங்., மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியின் மகனுமான, அபிஜித் முகர்ஜி பேட்டி: லட்சக்கணக்கான காங்., தொண்டர்கள், கட்சிக்கு பிரியங்கா தலைமையேற்க வேண்டும் என, விரும்புகின்றனர். அவர்களின் வேண்டுகோளை, பிரியங்கா நிராகரிக்கக் கூடாது. தன் பாட்டி இந்திராவைப் போல், காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றியை, பிரியங்காவால் தான் பெற்றுத் தர முடியும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X