பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 இதே நாளில் அன்று

ஜூலை 19, 1827 மங்கள் பாண்டே:
உ.பி., மாநிலம், நாக்வா என்ற ஊரில், 1827, ஜூலை, 19ல் பிறந்தார். முதல் இந்திய சுதந்திரப் போர் என, வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும், சிப்பாய் கலகத்தை முன்னின்று நடத்தியவர். தன், 22வது வயதில், ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியில் சேர்ந்து, அதன், 34வது படைப் பிரிவில் பணிபுரிந்தார்.ஆங்கிலேய அதிகாரிகள், கொடுத்த தோட்டாக்களில் தடவிய பன்றி, பசுக் கொழுப்பு, வீரர்களின் வாயில் பட்டது. இந்த தோட்டாக்களை பயன்படுத்த, இந்திய சிப்பாய்கள் மறுத்தனர்.அவர்களிடம், 1857, மார்ச், 29ல், கிளர்ச்சியை துாண்டினார், மங்கள் பாண்டே; மேஜர் ஹ்யூசனை, சுட்டுக் கொன்றார். தொடர்ந்து, இந்திய சிப்பாய்கள், ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். பாண்டே கைது செய்யப்பட்டு, 1857 ஏப்., 8ல், துாக்கிலிடப்பட்டார்.மங்கள் பாண்டே, பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
19-ஜூலை-201913:29:15 IST Report Abuse
s.rajagopalan டில்லியில் காந்தியார் சுடப்பட்ட இடத்தில நாட்டின் விடுதலைக்காக உயிர் துறந்தோரின் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆழ்ந்து பார்த்து முடிந்ததும் சற்று நேரம் தொண்டை அடைத்தது. இவ்வளவு தியாகம் செய்து விடுதலை வாங்கி தந்த நாடு இன்று அரசியல் அயோக்கியர்கள் கையில் சிக்கிவிட்டதே என்று நினைக்கும்போது கோபமும் , துக்கமும் பொங்குகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X