மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி சொத்து பறிமுதல்

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
 மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி சொத்து பறிமுதல்

புதுடில்லி,உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின், சகோதரர் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான, 400 கோடி ரூபாய் மதிப்பிலான 'பினாமி' சொத்துக்களை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சட்ட திருத்தம்உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் சகோதரர், ஆனந்த் குமார். இவர், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணை தலைவராக, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.இவருக்கும், இவரது மனைவி, விசிட்டேர் லதாவுக்கு சொந்தமான, நொய்டாவில் உள்ள, 400 கோடி ரூபாய் மதிப்பிலான, 7 ஏக்கர், 'பினாமி' நிலத்தை, வருமான வரித்துறையினர், பறிமுதல் செய்தனர்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, 'பினாமி' சொத்துக்கள் பரிமாற்ற தடை சட்டத்தில், 2016ல் சட்ட திருத்தம் மேற்கொண்டது.

அதை தொடர்ந்து, இச்சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.முறைகேடு'பினாமி' முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு, ஏழு ஆண்டுகள் கடுங் காவல் தண்டனையும், சொத்தின் மதிப்பில், 25 சதவீதம் அபராதமாக விதிக்கவும், வழி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
19-ஜூலை-201919:35:07 IST Report Abuse
JSS செகுலரிஸ்ம் பேசுபவர்கள் எல்லோரும் மக்களின் வரிப்பணத்தை திருடும் திருடர்கள். செகுலரிஸ்ம், வாங்கி தேசியமயமாக்குதல் இரண்டுமே நாட்டை கொள்ளை அடிக்க செய்த செயல்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஜூலை-201915:59:37 IST Report Abuse
Endrum Indian அக்கிரமம், அநியாயம், எல்லாம் மோடியின் அராஜகம் என்று இங்கேயிருந்து முஸ்லீம் பேகம் மும்தாஜ் இங்கேயிருந்து கையை ஆட்டி ஆட்டி கோபமாக ஊளையிடுமே பார்க்கணும்???
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
19-ஜூலை-201915:35:39 IST Report Abuse
konanki கவல வேண்டாம் . சொஞ்சித் தலைமையில் திராவிடர் படை டெல்லிக்கு படை எடுத்து சொத்தை மீட்டு தரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X