பதிவு செய்த நாள் :
குல்பூஷண் ஜாதவை உடனே விடுவியுங்கள்:
பார்லி.,யில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

புதுடில்லி: ''சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நம் கடற்படையின் முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவை, பாகிஸ்தான் உடனடியாக விடுவிக்க வேண்டும்,'' என, பார்லியில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

குல்பூஷண் ஜாதவ், விடுவியுங்கள்,பார்லி, ஜெய்சங்கர், வலியுறுத்தல்


உளவு பார்த்ததாகவும், பயங்கரவாத செயலுக்கு சதி செய்ததாகவும் கூறி, நம் கடற்படையின் முன்னாள் அதிகாரியான, குல்பூஷண் ஜாதவுக்கு, பாக்., ராணுவ நீதிமன்றம், 2017ல் மரண தண்டனை விதித்திருந்தது.மரண தண்டனை

இதை எதிர்த்து, ஐரோப்பிய நாடான, நெதர்லாந்தின், த ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஜாதவுக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனையை, நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. 'அவருக்கான தண்டனை குறித்து, பாக்., மறுஆய்வு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, பார்லி.,யின் இரண்டு சபைகளிலும், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர். இது குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர், இரண்டு சபை களிலும், அறிக்கை தாக்கல் செய்தார்.முதலில் ராஜ்யசபாவிலும், பின்னர் லோக்சபாவிலும் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: குல்பூஷண் ஜாதவ் வழக்கில், வியன்னா ஒப்பந்தத்தை, பாக்., தரப்பு அப்பட்டமாக மீறியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. துாதரக ரீதியில் அவரை சந்திக்கவோ, வழக்கறிஞர் நியமித்து கொள்ளவோ, ஜாதவுக்கு அனுமதி அளிக்க வில்லை. துவக்கத்தில் இருந்தே, இது பொய் வழக்கு என, மத்திய அரசு கூறி வருகிறது. தற்போது சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு வெளி வந்துள்ள நிலையில், ஜாதவின் பாதுகாப்பு மற்றும் நல்ல உடல்நலத்தை உறுதி செய்ய

வேண்டிஉள்ளது. இது தொடர்பாக, பாக்., அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.


பாராட்டு


அவரை விரைவாக நாட்டுக்கு திருப்பி அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும். இந்த தீர்ப்பின் அடிப்படை யில், குல்பூஷண் ஜாதவை உடனடியாக விடுவிக்க, பாக்., அரசு, முன் வரவேண்டும் என்றும் வலியுறுத்துவோம்.

இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர், ஹரீஷ் சால்வே, சிறப்பாக வாதிட்டு, நம் நாட்டுக்கும், ஜாதவ் குடும்பத்துக்கும் வெற்றியை தேடித் தந்து உள்ளார்.மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோதும், ஜாதவின் குடும்பத்தார், மிகுந்த தைரியமுடன் செயல்பட்டனர். அவர்களுக்கு பாராட்டுகள்.இவ்வாறு, அவர் கூறினார்.
கண்காணிப்பில் பாக்.,தீர்ப்பை, பாக்., நிறைவேற்றாவிட்டால் மீண்டும், சர்வதேச நீதிமன்றம் செல்லலாம். தீர்ப்பில் மிகப் பெரிய மீறல்கள் இருந்தால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மூலம், பொருளாதார தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்க முடியும். அந்த அளவுக்கு செல்வதற்கு, பாக்., வாய்ப்பளிக்காது என்று நம்புகிறேன். உலகின் கண்காணிப்பில் உள்ளோம் என்பதை, பாக்., உணர்ந்திருக்கும்.

ஹரீஷ் சால்வே, மூத்த வழக்கறிஞர்பாகிஸ்தானுக்கு வெற்றிகுல்பூஷண் ஜாதவ் வழக்கில், சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, பாக்., வெளியுறவு அமைச்சர், ஷா முகம்மது குரேஷி கூறியதாவது: இந்த வழக்கில், ஜாதவின் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.அவரை விடுதலை செய்ய வேண்டும்,இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் போன்ற கோரிக்கைக ளை யும், சர்வதேச நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த தீர்ப்பு, பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள வெற்றி.

Advertisement

ஆனால், தங்களுக்கு கிடைத்த தீர்ப்பாக, இந்தியா கொண்டாடி வருகிறது. ஜாதவ், பாக்.,கில் தான் இருப்பார். சட்ட விதிகளின் படி அவர் நடத்தபடுவார்.இவ்வாறு,அவர் கூறினார்.பாக்., பிரதமர், இம்ரான் கான் கூறியதாவது:


கமாண்டர் குல்பூஷண் ஜாதவ் தண்டனைக்கு தடை விதிக்க முடியாது, விடுதலை செய்ய முடியாது, சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது என, சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். பாக்., மக்களுக்கு எதிராக, அவர் குற்றம் செய்து உள்ளார். அவர் மீது, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர், மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறியதாவது: இந்தாண்டு, பிப்., 27ல், இந்திய எல்லைக்குள் புகுந்து, அதன் விமானப் படை விமானத்தை சுட்டு வீழ்த்தினோம். இந்த தீர்ப்பு, பிப்., 27ல் நாங்கள் அளித்த அதிர்ச்சி போல், இந்தியாவுக்கு கிடைத்துள்ள மற்றொரு அதிர்ச்சி.இவ்வாறு, அவர் கூறினார்.பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்


அமெரிக்காவுக்கான இந்தியத் துாதர், ஹர்ஷ் வர்தன் சிருங்கலா, பேட்டி ஒன்றில் கூறிய தாவது: 'பயங்கரவாதத்துக்கு எதிராக, பாக்., கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் வலி யுறுத்தி வருகிறார். இது வெறும் பேச்சாக இல் லாமல்,பாக்.,குக்கு அளித்து வந்த நிதி உத வியை நிறுத்தி, டிரம்ப் நடவடிக்கை எடுத்து உள்ளார். இதற்கு முன், எந்த அமெரிக்க அதிபரும் இவ்வளவு தீவிரமாக செயல்பட்டது இல்லை.


இந்நிலையில், தன் மண்ணில், பயங்கரவாதத் துக்கு ஆதரவில்லை என்பதை, பாக்., நிரூபிக்க வேண்டும்.இதற்காக, கடுமையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும். ஒரு பக்கம் நடவடிக்கை என்று கூறிக் கொண்டு, மற்றொரு பக்கம், அவர்களுக்கு கதவை திறந்து விடக் கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
19-ஜூலை-201919:59:00 IST Report Abuse

JSSபாகிஸ்தான் மீது குண்டு மழை பொழிவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல.ஆனால் அவர்கள் மறுபடி தலை எடுக்காத மாதிரி carpet bombing செய்யவேண்டும்.

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
19-ஜூலை-201919:45:25 IST Report Abuse

Sathish ராட்சசனிடம் மனிதாபிபானம் எதிர்ப்பார்க்கும் இந்தியா.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-ஜூலை-201907:26:57 IST Report Abuse

ஆரூர் ரங்அபிநந்தனை விடுதலை செய்ததுபோல குலபூஷனையும் விரைவில் விடுதலை செய்யவேண்டிவரும் பாகிஸ்தான் என்ன எந்த இஸ்லாமிய நாடும் உண்மையான அமைதியைப் பற்றிப்பேசாது. அதென்னவோ தெரியவில்லை அவர்களால் சந்தேகப்படாமலோ சண்டைபோடாமலோ இருக்கவே முடியாது மதம்தான் காரணமென நினைக்கவைக்கிறார்கள் .நபிகளாரின் மறைவுக்குப்பின் மார்க்கத்தை முற்றுமறிந்தவர்கள் சுவர்க்கவாசிகள் என அவரால் அறிவிக்கப்பட்டவர்களே ஆட்சியதிகாரத்துக்காக ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு கொன்றது நினைவுக்கு வருகிறது அதுவும் அவரது மனைவி ஆயிஷாவே வாளெடுத்தார் . பாகிஸ்தான் மத அடிப்படையில் அமைந்த ஒரே உலக நாடு . தனது மத அடிப்படையை நியாயப்படுத்த காபிர் நாடுகளாடு மோதுவது வாடிக்கைதான் .

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X