புதுடில்லி: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், மத்தியஸ்தர் குழு, இம்மாத இறுதி வரை, தன் சமரச நடவடிக்கையை தொடரலாம் என்றும், இறுதி அறிக்கையை, ஆக., 1ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உ.பி., மாநிலத்தில், முதல்வர், யோகி ஆதித்ய நாத் தலைமையிலான,பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப் பட்டதை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பதில், கருத்து வேறுபாடு எழுந்தது.
14 மனுக்கள்
இது தொடர்பான வழக்கை விசாரித்த,
அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து, நிர்மோகி அகோரா, ராம் லல்லா, சன்னி வக்ப் வாரியம் ஆகியவற்றுக்கு வழங்கும்படி, 2010ல், உத்தரவிட்டது.இதை எதிர்த்து, 14 மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத் தில் தாக்கல்செய்யப்பட்டன.
இதை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இந்த பிரச்னைக்கு, நீதி மன்றத்துக்கு வெளியில் தீர்வு காண்பதற்காக, 3 பேர் அடங்கிய மத்தியஸ்தர் குழுவை நியமித்தது. நீதிபதி, எப்.எம்.கலிபுல்லா தலைமையிலான இந்த குழுவில்,வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவினர், வழக்கில் சம்பந்தபட்டவர்களுடன் பேச்சு நடத்தி, ஆக., 15ல் அறிக்கை தாக்கல் செய்யும்படியும், நீதிபதிகள்உத்தரவிட்டிருந்தனர்.
ஆக., 1ம் தேதி
இந்நிலையில், சமரச பேச்சு தொடர்பான தற்போதைய நிலையை, ஆக., 18க்குள், அறிக்கை யாக தாக்கல் செய்யும்படி, உச்ச நீதிமன்றம், சமீபத் தில் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மத்தியஸ்தர் குழு, விசாரணை அறிக்கையை,
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள விபரங்கள், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய். சந்திர சூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மத்தியஸ்தர் குழு, இம்மாத இறுதி வரை,சமரச நடவடிக்கையை தொடரலாம். இந்த விவகாரம் தொடர்பான இறுதிஅறிக்கையை,ஆக., 1ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் வழக்கின் விசாரணை, ஆக., 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் படுகிறது.இவ்வாறு, உத்தரவிட்டனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (5)
Reply
Reply
Reply