பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'டிக் டாக், ஹலோ' செயலிகளுக்கு
மத்திய அரசு கடும் எச்சரிக்கை

புதுடில்லி:'டிக் டாக், ஹலோ' ஆகிய மொபைல் செயலி நிறுவனங்களிடம், 21 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனில், தடையை சந்திக்க நேரிடும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


டிக் டாக், ஹலோ போன்ற பொழுதுபோக்கு மொபைல் செயலிகளை, சிறியவர்கள் முதல்,

பெரிய வர்கள் வரை, பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த செயலி மூலம், ஆபாசமான 'வீடியோ'க் கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், இவை, 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் மூலம், அதிகம் பகிரப்படுவதாகவும் குற்றச்சாட்டுஎழுந்தது.


இந்நிலையில், பல சமூக விரோத செயல்களுக்கு, இந்த செயலிகள் பயன்படுத்தப்படுவதாக, சுவதேசி ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடியிடம், புகார் மனு அளித்தது. இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து, மத்திய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சகம், விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த வகையில், டிக்டாக் மற்றும் ஹலோ செயலிகளுக்கு, 21 கேள்வி களை உள்ளடக்கிய நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.



இதற்கு தகுந்த விளக்கத்தை அந்நிறுவனங்கள்

Advertisement

தரவில்லை எனில், அவை தடை செய்யப்படும் என, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, டிக்டாக், ஹலோ செயலிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:


ரூ.700 கோடி





எங்கள் செயலிகளுக்கு, இந்திய மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அடுத்த மூன்றாண்டுகளில், இந்தியாவில், 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளோம்.


எனவே, எங்கள் பயனாளர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுவோம். இந்த நேரத்தில், அரசின் நன்மதிப்பை பெறும் வகையில், பொறுப்புடன் எங்கள் நிறுவனம் செயல்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
19-ஜூலை-201922:07:50 IST Report Abuse

J.Isaacதடை செய்யப்பட வேண்டும் .

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
19-ஜூலை-201922:47:57 IST Report Abuse

எதிர்க்குரல் தடை அதை உடை புது சரித்திரம் படை. ...

Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
19-ஜூலை-201913:33:16 IST Report Abuse

s.rajagopalanஅவங்க வியாபாரிகள். பணம் பண்ணுவதில்தான் ஒரே குறி. பதிலை விரைவாக கேட்டு பெறவேண்டும். பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கையை தாமதமின்றி எடுக்கவேண்டும். மோடி எடுப்பார் என நம்பலாம்.

Rate this:
19-ஜூலை-201908:27:39 IST Report Abuse

padma rajanஅவைகளை ban செய்ய ஏன் அரசுக்கு திராணி இல்லை?

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X