பதிவு செய்த நாள் :
இங்கு சண்டை போடாதீங்க!
காவிரி பிரச்னையில் சபாநாயகர் அட்வைஸ்

புதுடில்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன் உள்ள காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்னையை, பா.ஜ.,வின் கர்நாடக, எம்.பி., எழுப்பியபோது, 'இங்கு சண்டை போடாதீர்கள்' என, சபாநாயகர் கூறியது, லோக்சபாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

சண்டை,காவிரி,பிரச்னை,சபாநாயகர், அட்வைஸ்


பிரச்னை



பார்லி., கூட்டத் தொடர் நடந்து வருகிறது. லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, பா.ஜ.,வை சேர்ந்த, கர்நாடகா, எம்.பி., ஷோபா கரேந்த்லாஜே பேசியதாவது: கர்நாடகா வின் பல மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப் பாடு உள்ளது. இந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன், காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்னை வேறு உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.எதிர்வரிசையில்

அமர்ந்திருந்த,தமிழக,ஆந்திர,தெலுங்கானா, எம்.பி.,க்களை சுட்டிகாட்டி அவர் பேசினார். அப்போது குறுக்கிட்ட, சபாநாயகர், ஓம் பிர்லா, ''சண்டையை எங்கு போட வேண்டுமோ அங்கு வைத்துக் கொள்ளுங்கள். இங்கு சண்டை போடக் கூடாது,'' என, கூறினார்.



அதனால், சபையில் சிரிப்பலை ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து, நீர்வளத் துறை அமைச்சர், கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாவது:நதி நீர் பங்கீடு தொடர்பாக, பல மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்னைகள், நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களி லும் உள்ளன. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாடுமுழுவதும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக, ஜலசக்தி அபியான் எனப்படும், நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.



விநியோகம்


இதற்காக, நிலத்தடி நீர்மட்டம் மோசமாக உள்ள, 256

Advertisement

மாவட்டங்களில், 1,592 வட்டாரங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அங்கு நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்படும். தற்போது நாடு முழுவதும், நகர் பகுதியில் உள்ள, 17.87 கோடி வீடுகளில், 3.27 கோடி வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நடக்கிறது.


வரும், 2024க்குள், நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குழாய் மூலம் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
19-ஜூலை-201921:23:17 IST Report Abuse

J.Isaacதேசிய நெடுஞசாலைகளை L &T க்கு கொடுத்து சுங்க வரி வசூல் செய்தது , செய்கிறது போல் இதையும் தனியார் கம்பெனிக்கு கொடுத்து வரி வசூல் செய்யலாம்

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-ஜூலை-201917:00:28 IST Report Abuse

J.V. Iyerதேசிய கட்சிகள் ஆளாமல், குறுகிய மனப்பான்மை உள்ள மாநிலக்கட்சிகள் மாநிலங்களை ஆட்சி செய்வதால் வந்த தீராத பிரச்சினை இது.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஜூலை-201916:14:19 IST Report Abuse

Endrum Indianஅட்வைஸ் கேட்கும் நிலையிலா இப்போதைய எம் எல் ஏ, எம் பி க்கள் இருக்கின்றனர்???அப்படி இருந்திருந்தால் அவர்கள் ஜன சேவை செய்திருப்பர். இப்போ இருக்கிறவனுங்க எல்லோரும் தன் பாக்கெட்டுக்கு பண சேவை செய்ய மட்டுமே உள்ளவர்கள்.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X