அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலுாரில் கமல் கட்சி போட்டியில்லை

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை, : 'வேலுார் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை' என, மக்கள் நீதி மையம் கட்சி அறிவித்துள்ளது.அக்கட்சியின் பொதுச் செயலர், அருணாச்சலம் அறிக்கை:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது, வேலுார் தொகுதியில், சட்டவிரோத பணப் பட்டுவாடா நடந்ததால், ஓட்டுப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டது. பணப் பட்டுவாடா தொடர்பான வழக்குகளில், எந்த முன்னேற்றமோ, முடிவோ எட்டப்படவில்லை.

அதற்குள், வேலுார் தொகுதியில் தேர்தல் நடத்துவதால், தேர்தல் ஆணையத்தின் மீது, மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை காப்பது முக்கியம். அப்பணியில், மக்கள் நீதி மையம் கவனம் செலுத்த உள்ளது.வர உள்ள, தமிழக சட்டசபை தேர்தலில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான பணிகளில், மக்கள் நீதி மையம் ஈடுபட்டுள்ளது. அதனால், வேலுார் தொகுதியில் போட்டியிடுவதில்லை என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
19-ஜூலை-201914:21:43 IST Report Abuse
Aravindh Raman இது தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது இருக்குமோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X