தினமலர் கார்ட்டூன் வந்தால் மகிழ்ச்சி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தினமலர் கார்ட்டூன் வந்தால் மகிழ்ச்சி'

Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (38)
Share
 'தினமலர் கார்ட்டூன் வந்தால்  மகிழ்ச்சி'

சென்னை, ''தினமலர் நாளிதழில், என்னை கிண்டல் செய்து, 'கார்ட்டூன்' போடும்போது, நான் மகிழ்ச்சி அடைவேன்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ தெரிவித்தார்.தாம்பரத்தில் நடந்த திருமண விழாவில், அவர் பேசியதாவது:நீதிமன்றத்தில், நான் குற்றவாளி என்று தண்டிக் கப்பட்டதும், கண்ணீர் விடாதவர்கள் இல்லை. எவ்வளவு தண்டனை என்று, செய்தி வருவதற்கு முன், குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட செய்தி வந்ததும், ராஜ்யசபாவுக்கு செல்ல முடியாதே என்று, கட்சியினர் அழுது புலம்பினர்.'தினமலர்' நாளிதழில், கோகுலாச்சாரி என்பவர், என்னை கடுமையாக நிந்தித்துள்ளார்.
அப்படியாவது, வைகோ என்ற பெயர், அந்த பத்திரிகையில் வந்துள்ளதல்லவா!எவ்வளவு நிந்தித்து, இழிவாக எழுத முடியுமோ, அவ்வளவு எழுதி உள்ளனர். நான் ஒருபோதும், 'தினமலர்' பத்திரிகையை தாக்கியதில்லை. 'தினமலர்' நாளிதழ் ஆசிரியர், பெரியவர், கிருஷ்ணமூர்த்தி, நாணயவியலில், உலகத்தின் தொன்மை நாணயம், தமிழர்களிடம் தான் இருந்தது என்பதையும்; தமிழர்கள், கிரேக்கத்துடனும், ரோமானியர்களுடனும், வியாபாரம் செய் ததற்கான சான்றுகளையும் கண்டுபிடித்து கொடுத்தவர்.எங்கள் மாநாடுகளில், அவரை உயர்த்தி பேசி உள்ளேன். என்னை கிண்டல் செய்து, 'கார்ட்டூன்' போடும்போது, நான் மகிழ்ச்சி அடைவேன். அப்படியாவது, நமது பெயரை போடுகின்றனரே... எனக்கு ஒன்றும் வருத்தம் கிடையாது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X