மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்

Updated : ஜூலை 18, 2019 | Added : ஜூலை 18, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement
ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்

புதுடில்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின், சகோதரர் மற்றும்அவரது மனைவிக்கு சொந்தமான, 400 கோடி ரூபாய் மதிப்பிலான 'பினாமி' சொத்துக்களை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.


சட்ட திருத்தம்



உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் சகோதரர், ஆனந்த் குமார். இவர், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணை தலைவராக, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.


latest tamil news



இவருக்கும், இவரது மனைவி, விசிட்டேர் லதாவுக்கு சொந்தமான, நொய்டாவில் உள்ள, 400 கோடி ரூபாய் மதிப்பிலான, 7 ஏக்கர், 'பினாமி' நிலத்தை, வருமான வரித்துறையினர், பறிமுதல் செய்தனர்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, 'பினாமி' சொத்துக்கள் பரிமாற்ற தடை சட்டத்தில், 2016ல் சட்ட திருத்தம் மேற்கொண்டது. அதை தொடர்ந்து, இச்சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.


முறைகேடு



'பினாமி' முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு, ஏழு ஆண்டுகள் கடுங் காவல் தண்டனையும், சொத்தின் மதிப்பில், 25 சதவீதம் அபராதமாக விதிக்கவும், வழி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
19-ஜூலை-201914:11:33 IST Report Abuse
konanki எல்லோர் ஆசையும் தமிழ் நாட்டில் 400000000000 கோடி பினாமி சொத்து பிடி பட மாட்டேங்குதே ன்னு தான். அனால் இது விஞ்ஞான உழல் பார்ட்டி . சிக்காது . தெய்வம் நின்று கொல்லும்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
19-ஜூலை-201914:05:42 IST Report Abuse
konanki ஐயகோ தாழ்த்தப்பட்டவர் ஓடாய் உழைத்து ஆட்டை போட்ட 400 கோடி சொத்தை ஆர்ய ஆதிக்க சக்தி பிடுங்க வாரங்க .உடன் பிறப்பே போராட களம் புகு
Rate this:
Cancel
19-ஜூலை-201911:56:59 IST Report Abuse
நக்கல் ஒரு சில தலித்துகள் கஷ்ட பட்டு மேல வரப் பார்க்கிறார்கள், மேலே வந்த தலைகள் இப்படி கொள்ளை அடிச்சா அந்த கும்பல் மேலே வராமல் கீழேதான் செல்லவேண்டும்... இதெல்லாம் தவறு என்று தலித்துகள் எதிர்க்க வேண்டும்.. இதற்கு எதிராக பாராளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ குருமா குரல் கொடுப்பாரா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X