பதிவு செய்த நாள் :
பட்ஜெட்டால் வாழ்க்கை முன்னேறும்:
லோக்சபாவில் அமைச்சர் நிர்மலா உறுதி

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்களால், நாட்டு மக்களின் எளிதான வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்படும்,'' என, மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிர்மலா சீதாராமன் கூறினார்.

பட்ஜெட், வாழ்க்கை,முன்னேறும், லோக்சபா,அமைச்சர் நிர்மலா


மத்திய பட்ஜெட் குறித்து, லோக்சபாவில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து, அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று பேசியதாவது: நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், உள்நாட்டில்

உற்பத்தியை ஊக்குவிக்கும். 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கும், பணப்பட்டு வாடாக் கள், 'டிஜிட்டல்' முறையில் மேற்கொள்வதற்கும் உத்வேகம் அளிக்கும்.வங்கிகளில் இருந்து, ஒரே நேரத்தில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், 2 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை செலுத்து வோருக்கு, கூடுதல் வரிச்சுமை இருக்காது. இந்த வரி, தனிநபர்களுக்குத் தான் பொருந்துமே தவிர, நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பதால், நிறுவனங்களின் நிதி செயல்பாட்டில் எந்தசிக்கலும் இருக்காது.வரிச் சட்டங்களை எளிதாக்குவதற்காக, புதிய, நேரடி வரிகள் நெறிமுறைகளை வகுக்க, சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏழு மறைமுக வரிகளை சீரமைப்பது

Advertisement

தொடர்பான, சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப் படுகிறது. இதனால், அந்த வரிமுறை மேலும் எளிதாகும்.அதுபோல, நேரடி வரி விதிப்பு தொடர்பான, ஏழு சட்டங்களும் திருத்தப்படும்;நிதிச்சந்தை தொடர்பான, எட்டு சட்டங்களும் மாற்றியமைக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் பேசினார். அதன் பின், குரல் ஓட்டு வாயிலாக, பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
19-ஜூலை-201921:38:33 IST Report Abuse

Girijaதமிழகத்தில் தான் நிறைய அப்பன் அன்னை பட்டம் தாராளமாக கிடைக்கும் . கல்விக்கு பல அப்பன்கள், பகுத்தறிவுக்கு பல அப்பன்கள் உடம்பே கூசுகிறது. நல்ல வேளை பெண்மையின் புனிதம் ஒருவனுக்கு ஒரு அம்மாதான் இருக்கமுடியும் .

Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
19-ஜூலை-201918:10:39 IST Report Abuse

Mirthika Sathiamoorthiநரசிம்மராவ் மன்மோகன் சிங்க் பட்ஜெட்டை தவிர எந்த பட்ஜெட்டும் வாழ்க்கையை மாத்துனமாதிரி தெரியல...பட்ஜெட்டுன என்ன? a statement of account right ? எனது வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு, துண்டு விழுந்திச்சு எவ்வளவு, எவ்வளவு கடன் வாங்கப்போறேன், வருவாயை அதிகரிக்க என்ன செய்யப்போறேன் இதுமாதிரி...... வரியை ஏத்துவதன் மூலம் உங்களுக்கு எவ்வளவு வருவாய் வந்திச்சுன்னு சொல்றது உங்கள் கடமை. சொல்லியிருக்கீங்களா? முதலில் விவசாயம்...அது சிக்கலா இருக்கறப்ப ஸிரோ பட்ஜெட் பார்மிங்கை தீர்வா சொல்றது கொஞ்சம் கேலிக்கூத்தா தெரியலை ( மாட்டுச்சாணத்தையும், கோமியத்தையும் தீர்வுன்னா எங்கேபோய் முட்டிகிறது...?) .அப்படிப்பாத்த இது ஒரு சாதாரண பட்ஜெட்...ஏன் சொல்றேன்னா இந்த அரசுக்கு நிர்பந்தமோ, ஆட்சியை காப்பாத்த யாரையாவது திருப்தி படுத்த வேண்டிய அவசியமோ அழுத்தமோ இல்லாதப்ப என்ன பண்ணியிருக்கலாம்? எவ்வளவு தைரியமா முடிவு எடுக்கலாம்? இங்க பிரச்சனையே ஏதோ ஒரு எண்ணை கொடுத்துட்டு பொருளாதாரம் ஓஹோன்னு இருக்குன்னு சொல்றதுதான் பிரச்னை....பொருளாதாரம் தள்ளாடுது அதனால் இந்த பட்ஜெட்டுன்னு சொல்லியிருந்த ஏதோ மன்னிக்கலாம்..அப்படி சொல்லலையே..5.8% GDP இது 7% ஆகப்போகுது 2022 இல் 8 % ஆகப்போகுது...காரணம் கச்சா என்னை விலை குறையும் அதனால் பொருளாதாரம் வளரும்...இந்த அரசை காப்பாத்துனதே பெட்ரோல் டீசல் தான்...அதுல மறுபடியும் 2 ரூபா ஏத்தி இருக்காங்க ..ஒருவேளை கச்சா எண்ணெய் குறைஞ்ச பொது மக்களுக்கு லாபம்? சாதாரண மக்களின் பிரச்சனையே பெட்ரோல் விலை...பெட்ரோலும் மதுவும் GST க்குள் வரும்ன்னு சொல்லிட்டு 2 ரூபாயை அதுவும் cess இல் போடுவது? கடந்த 5 வருடத்தில் 8 லட்சம் கோடி இதில்தான் வந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு எப்படி டாஸ்மாக்கோ டெல்லிக்கு பெட்ரோல்....பெட்ரோலை GSt க்குள் கொண்டுவந்து 40% வரி விதிச்சா கூட விலை லிட்டருக்கு 50 ரூபாய்க்கு கீழ போயிடும்..இப்போ பெட்ரோல் பங்குக்கு விற்கும் விலை 31 ரூபாய்..மக்களிடம் விக்கும் விலை 75 ரூபாய்...எந்த சார்க் நாடுகளிலும் இந்த வரி இல்லை.. இதைப்போய் யாராச்சும் GSt க்குள் கொண்டு வருவோமா? ..இந்த மொத்தப்பணமும் மத்திய அரசுக்கே போன மாநில அரசின் வருவாய்? எப்படி டாஸ்மாக்கை மூடுவான் எங்க சைடில? உங்க வருமானத்தை பெருக்க எங்ககிட்ட இருந்து 2 ரூபா புடிங்கிய உயர்தனும்? பணக்காரன்கிட்டே புடுங்க முடியாது...ஏன்னா? இந்தியா முழுதும் பதிவு செய்யப்பட்ட பணக்காரன் 40000 பேர் மட்டுமே.....அடுத்தது ஒரு லட்சம் கோடி ரூபாயை இலக்கு ...எதில்? அரசின் முதலீட்டை திரும்ப பெறுவதில் ( disinvestment ) ( இன்னும் பெரிய காமெடி )...ஏர் இந்தியா போன்ற நிறுவனம் disinvestment பண்ணப்போறோம்ன்னு இன்னமும் சொல்லிகிட்டே இருக்கோம். அதேமாதிரி சேலம் இரும்பு ஆலை.அதன் நிகர நஷ்டம் எவ்வளவு? ஒரு 2000 ஊழியர்கள் இருப்பாங்களா?.ஆளுக்கு ஒரு கோடி கொடுத்து மூடிடலாம். எங்க டிஸின்வெஸ்ட்மெண்ட்டுன்னு பொயெல்லாம்?. அடுத்து இலக்கு 100 லட்சம் கோடி வருவாய்...அந்நிய முதலீட்டின் மூலம் . சாத்தியமா? இதற்கான வரைவு எதுவும் இல்லை... இதுவரைக்கும் சரக்கு ரயிலில் 1 லட்சம் கோடி முதலீட்டை நம்மால் ஏற்படுத்தவே முடியவில்லை.. ..உள்கட்டமைப்பின் மூலம்தான் வேலைவாய்ப்பு பெருகும் மக்களிடம் பண புழக்கம் அதிகரிக்கும் அரசின் வருமானமும் பெருகும் இது பச்சை குழந்தைக்கு கூட தெரியும்..அதுல போய் இப்போ ஒரு லட்சம் கோடி குறைச்சாச்சு...அரசின் செலவை அதிகரிச்சு முதலீட்டை கொறச்ச எப்படி வருமானம் வரும்? அரசின் செலவு குறைக்க ஏதாவது பண்ணியே ஆகணும்...இப்படியே போச்சுன்னா ஒரு கட்டத்தில் வருமானத்தை சம்பளத்துக்கு மட்டும் கொட்டிட்டு போயிட்டே இருக்கவேண்டியதுதான்..BSNL ஏன்னா பிரச்னை? அவன்கிட்டத்தான் அதிக டவர் இருக்கு...உள்கட்டமைப்பு சிறப்ப இருக்கு பின் என்னாச்சு? BSNl உடைய salary bill மொத்த வருமானத்தில் 68 % ( Airtel salary bil 3 % of revenue , odaphone 5 .9 % ) இந்தியாவின் மொத்த வரி வசூளிலே 25 லட்சம் கோடிதான்...பென்ஷன் + ராணுவம் + வட்டி இதுவே பட்ஜெட்டில் 90 % எங்க முதலீடு பன்றது? ரொம்ப கவலையான விஷயம் பெண்களின் வேலைவாய்ப்பில் சதவீதம் குறைஞ்சிருக்கு...அதாவது பெண்கள் வேலைக்கு போறது குறைஞ்சுகிட்டே வருது..இந்த பட்ஜெட்டில் அதப்பத்தி ஒண்ணுமே சொல்லலை....இருக்குற வேலையில சம்பளம் கொடுக்க முடியல..இதுல இவங்க வேறயா அப்புடீங்கறது காதில் விழுது ? கிராமப்புற வேலைவாய்ப்பில் கடந்த முறை இதத்தை விட 4500 கோடி குறைச்சிருக்காங்க...இது சரியா? பட்ஜெட்டுன 3 விஷயம் 1 . வைப்பு நிதி ( fiscal டெபாசிட்) கண்ட்ரோல் இருக்கணும், 2 . பண வீக்கம் (inflation ) கண்ட்ரோலில் இருக்கணும் 3. வருவாயை அதிகரிக்கணும் இதெல்லாம் இப்ப இருக்கிற சூழ் நிலையில் ரொம்ப கஷ்டம்.. Tax compliance அதிகப்படுத்துவோம் வரி வருவாயை அதிகப்படுத்துவோம் அதன்மூலம் உள்கட்டமைப்பை வலுபடுத்துவோம் அப்ப்டீங்கறதும், சம்பள செலவை எப்படி கட்டுப்படுத்துவோம் இதபதியும் ஒரு செய்தியும் இந்த பட்ஜெட்டில் இல்ல அப்புறம் எதுக்கு பட்ஜெட்?.. தங்கத்தின் மீது வரி...கடந்தஆண்டுகளில் தங்கமீதான முதலீடு லாபகரமாதே இல்லை..விலை ஏத்திட்டு தங்கம் வாங்குறது கொறஞ்சிடும் அப்படித்தானே ? தங்கம்தான் ஏழைகளின் ஒரே முதலீடு.... அசையா சொத்து...எனக்கு இப்ப காசு வேணும்ன்னா தங்கத்தை விட்ட வேறுவழியில்லை...லோன் எத்தனை நாள் காத்திருக்கணும்? அடிபட்டு கெடந்த பேங்க் லோன் கொடுக்கும்? ஆத்திர அவசரத்துக்கு எனக்கு இருப்பது அது ஒண்ணுதான்...அதையும் வாங்க முடியாம பண்ணிட்டா? என்னால நில புலனெல்லாம் வாங்க முடியாது..எனக்கு சொத்தே தங்கம் தான்...அதிலகைவெச்சு ஏன் தண்டிக்கறீங்க? பத்திரிக்கை காகிதத்தில் 10 % வரி உயர்வு முடியலடா சாமி.....நிர்மலா மேடம், பொருளாதாரம், ரொம்ப மோசமா இருக்கு, விவசாயம் சிக்கலா இருக்கு வாயை கட்டி வயித்தை கட்டி பொழப்பு நடத்த வேண்டியிருக்குன்னு சொன்னால் போதும் இந்த பட்ஜெட் ஒத்துக்கலாம்...ஆனா நம்ம விட்ட ரீல், பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் வளருதுன்னு சொல்லி....இப்போ இவளவு வரிபோட்டா? இது வாழ்க்கை முன்னேற்றும்ன்னு வேற சொல்றீங்க...ஏம்மா வயித்தெரிச்சலை கெளப்பிட்டு...

Rate this:
RAMESH - CHENNAI,இந்தியா
19-ஜூலை-201916:39:47 IST Report Abuse

RAMESHநீங்க எப்போ பெட்ரோல் & டீசலை GST கீழ் கொண்டு வருகிறார்களோ அப்பொழுதான் சாமானியனின் வாழ்க்கை முன்னேறும்

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X