சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலத்தில் மோதி வேன் கவிழ்ந்து விபத்து திருத்தங்கலை சேர்ந்த 6 பேர் பலி: 12 பேர் காயம்

Added : ஜூலை 19, 2019
Advertisement
பாலத்தில் மோதி வேன் கவிழ்ந்து விபத்து திருத்தங்கலை சேர்ந்த 6 பேர் பலி: 12 பேர் காயம்

துாத்துக்குடி, திருச்செந்துார் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாயினர். 12 பேர் காயமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல், பாண்டியன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். சிவகாசி பட்டாசு ஆலையில் பணியாற்றுகிறார். மனைவி செண்பகலட்சுமி, மற்றும் உறவினர்கள் என 20 பேருடன் வேனில் திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு கிளம்பினர். வேனை முருகேசன் ஓட்டினார்.நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணியளவில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துார் செல்லும் ரோட்டில், கருங்குளம் அருகே வாய்க்கால் பாலத்தில் மோதி, 20 அடி பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.இடிபாடுகளுக்குள் சிக்கி காளிராஜன் மனைவி பாக்கியலட்சுமி 46, ராமன் மனைவி முத்துலட்சுமி 65, அருணாசலபாண்டி 35, அவரது 3 மாத குழந்தை அனீஷ்பாண்டி, சுகுமாறனின் மகன் ஜெகதீஸ்வரன் 12, கோபாலகிருஷ்ணன் மகன் நித்தீஷ் 4 ,ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.வேன் டிரைவர் முருகேசன் 45, செந்தில்குமார் 38, அவரது மனைவி செண்பகலட்சுமி 30, மகன் விஷ்ணு 11, மகள் ஸ்வேதா 8, கோபால் மனைவி சூர்யபிரபா 21, சுகுமாறன் 48, அவரது மனைவி மாரீஸ்வரி 38, அருணாசலபாண்டி மனைவி கவுசல்யா 22,, வைரம் மனைவி மல்லிகா 65, உள்ளிட்ட 12 பேர் படுகாயமுற்றனர். அவர்கள் திருநெல்வேலி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். செய்துங்கநல்லுார் போலீசார் விசாரித்தனர்.ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அருண் பாலகோபாலன், தலைமையில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.நள்ளிரவு விபத்துதிருநெல்வேலியில் இருந்து திருச்செந்துார் செல்லும் ரோடு வளைவுகள் நிறைந்த சிறிய சாலையாகும். அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இரவு பயணத்தை தவிர்த்திருந்தால் இத்தகைய உயிர் இழப்புகளை தவிர்த்திருக்கலாம், என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X