சிவராஜ் சிங் சவுகான் வளர்ப்பு மகள் மர்மசாவு

Added : ஜூலை 19, 2019
Advertisement
சிவராஜ் சிங் சவுகான் வளர்ப்பு மகள் மர்மசாவு

போபால்: மத்திய பிரதேச மாநில பா.ஜ. மூத்த தலைவர் சிவராஜ்சிங் சவுகான், இவரது வளர்ப்பு மகள் பாரதி வர்மா, நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு விதிஷாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு அங்கு சிகிச்சை பலின்றி இறந்தார்.

பாரதி வர்மா கணவர் ரவீந்திரா கூறுகையில், எனக்கும் பாரதி வர்மாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.கடந்த சில நாட்களாக பார்தி வர்மா உடல் நலகுறைவால் அவதியுற்று வந்தார். திடீரென நேற்று வாந்தி எடுத்தார் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தோம் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்றார்.
திடீர் மரணத்திற்கான காரணம் குறித்த தகவல் தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர். சிவராஜ்சிங் சவுகான் ஜார்க்கண்ட் சென்றுள்ளதால் அவருக்கு வளர்ப்பு மகள் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X