பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் மழை; பக்தர்கள் தவிப்பு

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சபரிமலை : சபரிமலையில் தொடர்ந்து பெய்யும் மழையால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். மண்டல சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.






சபரிமலையில் ஆடிமாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. கடந்த 16, 17 தேதிகளில் லேசான மழை பெய்தது. ஆனால் நேற்று காலை 5:00 மணிக்கு நடை திறந்த போது தொடங்கிய மழை இரவிலும் தொடர்ந்தது. மலையேறும் பக்தர்கள் சிரமப்பட்டனர். பிளாஸ்டின் தடை உள்ள நிலையில் பாலிதீன் கவர்களால் இருமுடி கட்டுகளை பக்தர்கள் நனையாமல் பாதுகாத்தனர். கவர்கள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.


ரோடுகள் சீரமைப்பு:


திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது:உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சபரிமலை பகுதிக்கான ரோடுகளை சீரமைக்க 36.29 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. 15.4 கி.மீ. தூாரமுள்ள நான்கு முக்கிய ரோடுகள் பராமரிப்புக்கு 12.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. பம்பையில் தற்போதுள்ள 268 கழிவறைகளுடன், 68 கழிவறைகள் கூடுதலாக கட்டப்பட்டு அக்., இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்.





மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை 12 சுடுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன, இந்த ஆண்டு மேலும் எட்டு குழாய்கள் அமைக்கப்படும். நிலக்கல்லில் 120 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். 20 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் தங்குவதற்கு வசதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - Ballary,இந்தியா
19-ஜூலை-201911:20:26 IST Report Abuse
Arasu இது இந்துக்கள் மட்டுமே அதுவும் இந்துக்களிடம் மட்டுமே பரப்பப்படுகிறது
Rate this:
Share this comment
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
19-ஜூலை-201909:52:59 IST Report Abuse
முதல் தமிழன் எந்த மதமாக இருந்தாலும் மூடநம்பிக்கைகள் ஒதுக்க பட வேண்டியவைகளே. நம்முடைய உள்ளமே பெருங்கோயிலாக இருக்கிறது. ரத்தம்,தசை,எலும்பு போன்றவற்றால் ஆன நமது உடலினுள் அந்தக் கோயில் இருப்பதால், நமது உடம்பு ஓரு ஆலயமாகத் திகழ்கிறது. வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X