‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (115)
Advertisement

புதுடில்லி: ‛தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பதன் மூலம், தங்கத்தில் தாலி அணியும் நடுத்தர வர்க்க பெண்களுக்கு, அது பெரும் கனவாகி விடும்' என தி.மு.க., கவலை தெரிவித்துள்ளது.






லோக்சபாவில், நேற்று(ஜூலை 18) நிதி மசோதா மீது, தென் சென்னை, எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் முதன் முதலில் பேசியதாவது: ஜனாதிபதி உரையாகட்டும், பிரதமரின் உரையாகட்டும், நிதியமைச்சரின் பட்ஜெட் உரையாகட்டும், எல்லாவற்றிலும் ஏகப்பட்ட வாக்குறுதிகள். இவற்றை ஒட்டு மொத்தமாக பார்த்தால்,வெறும் கானல் நீராகவே தெரிகின்றன.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதத்திலிருந்து, 12.5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது, நடுத்தர வர்க்க பெண்களை நேரடியாகவே பாதிக்கும். தங்கத்தில் தாலி அணிய வேண்டும் என்ற அவர்களது விருப்பம், இனி கனவாகவே முடியும். பெண்கள், குழந்தைகள், ஏழைகள் ஆகியோரின் நலன்களை அடிப்படையாக வைத்தே, நாட்டின் தலைவிதி நிர்ணியிக்கப்படும். ஆனால், நிஜத்தில், மத்திய அரசை எதிர்க்கும் சாமானியர்கள், எரிக்கப்படுகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை, கூட்டாட்சித் தத்துவம், மாநில நலன்கள், மதசார்பின்மை என அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு என, உருமாறி வருகிறது.

இந்தியாவின் ஆன்மா, கிராமங்களில்தான் வாழ்கிறது என்றார் காந்தி. ஆனால், விவசாயிகளுக்கு வெறும், 6 ஆயிரம் ரூபாயை வழங்கினால் போதுமா? தமிழக மக்கள், கஜா புயலில் பாதிக்கப்பட்டு நிர்கதியாக நின்றபோது, பிரதமர் மோடி வந்து பார்க்க மாட்டாரா என, ஏங்கினர். ஆனால், கடைசி வரை அவர் எட்டிப்பார்க்கவில்லை. ஹிந்தி பேசாத மாநிலங்களில், ஹிந்தி மொழியை வளர்ப்பதற்காக, ஆசிரியர்களை நியமிக்க, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மும்மொழி கொள்கையை திணிக்கும் மத்திய அரசின் நோக்கம் தெளிவாக தெரிகிறது. இதை ஏற்க முடியாது. இவ்வாறு, தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.


‛நெக்ஸ்ட்' க்கு கடும் எதிர்ப்பு:




எம்.பி.பி.எஸ்.,படிப்புக்கு, ‛நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதைப்போல, மருத்துவ படிப்பின் இறுதியாண்டில், 'நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்' எனப்படும். ‛நெக்ஸ்ட்' தேர்வை இனி எழுத வேண்டும். இது குறித்து, தூத்துக்குடி, எம்.பி., கனிமொழி லோக்சபாவில் பேசுகையில்,‛‛ஏற்கனவே நீட் தேர்வுகளுக்கு தமிழகம், மேற்குவங்கம் கடும் எதிர்ப்பை காட்டுகின்றன. இதில் நெக்ஸ்ட் தேர்வையும் சேர்க்க மத்திய அரசு முனைகிறது. இதை ஏற்க முடியாது. நெக்ஸ்ட் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-201901:40:28 IST Report Abuse
Rajagopal தீமூகத்தான் தாலி போடுவதை பெண்ணின் அடிமைத்தனமாகும் என்று முழங்குபவர்களாயிற்றே. தங்கத்தின் விலை ஏறி தாலி வாங்க முடியாமல் போனால் அவர்கள் கொண்டாட அல்லவா வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
22-ஜூலை-201917:20:13 IST Report Abuse
S Ramkumar எக்ஸிட் டெஸ்ட் அவசியம் தேவை. இல்லாவிடில் பிலிபைன்ஸ், சைபெரிய, ரஷிய நாடுகளில் உள்ள டுபாக்கூர் மருத்துவ கல்லூரிகளில் படித்து வந்து இங்கு வைத்தியம் செய்யும் அபாயநிலையை தவிர்க்க நெஸ்ட் அவசியம். இந்த அறிவிலிகளுக்கு யார் தான் இப்படி சொல்லி கொடுப்பார்களா தெரியவில்லை. எதை எடுத்தாலும் எதிர்ப்பு கோஷம். பன்னாடைகள். சுடலைக்கு வைத்தியம் பார்க்க வென்றால் லண்டன் செல்லுகிறார். அதனால் நீட், எக்ஸிட் எல்லாம் திருட்டு முன்னேற்ற கலகத்திர்ற்கு தேவை இல்லை.
Rate this:
Share this comment
veera - trichy,இந்தியா
23-ஜூலை-201914:23:25 IST Report Abuse
veeras.Ramkumar இப்படி பட்ட ஒரு கருத்தை பதிவு செய்துள்ளதால் நீங்கள் இன்றுமுதல் சங்கீ என அழைக்கப்படுவீர்....
Rate this:
Share this comment
Cancel
Selva - CHENNAI,இந்தியா
20-ஜூலை-201922:54:19 IST Report Abuse
Selva உண்மையில் உங்களைப்போல் உள்ள ஊழல் அரசியல் வாதி பணத்தை புடுங்க கடுமையான சட்டம் இருந்தாலே ,தமிழகத்தில் வறுமை ஒழியும்,இதை சுப்பீரிம் /ஹை கோர்ட் கொண்டு வர வேண்டும்( வறுமை ஒழிக்க) . தாலி அறுக்கும் திராவிட கூட்டத்தோடு இருந்து கொண்டு உனக்கு தாலியைப்பற்றி என்ன கவலை?.உனக்கு ஆடம்பரம் வருமானம் முக்கியம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X