பொது செய்தி

தமிழ்நாடு

'டிஜிட்டல்' பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம்

Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (4)
Advertisement
TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு

சென்னை: இந்தியாவில், 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையில், தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளதாக, 'ரேஸர் பே' நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ரேஸர் பே என்ற ஒருங்கிணைந்த பணப் பட்டுவாடா தீர்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகளில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் கர்நாடகா உள்ளது. இரண்டு மற்றும் மூன்றில், முறையே, மஹாராஷ்டிரா, டில்லியும்; ஐந்தாவது இடத்தில், ஆந்திராவும் உள்ளன.

நகரங்களில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனையில், சென்னை ஆறாவது இடத்தில் உள்ளது. தற்போது, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போன் வாயிலாக செய்யும் பரிவர்த்தனை, 2021ல், 10 மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-ஜூலை-201908:36:20 IST Report Abuse
ஆரூர் ரங் நகரமயமாதலைப் பொறுத்து மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். கருப்புப்பணம் ஒழிய டிஜிட்டல் பரிவர்த்தனை தான் தீர்வு ஆனால் கடத்தல் ஹவாலாவில் தமிழகம் நம்பர் ஒன் என்பது மாறாது .அதனையே இனத்தொழிலாக வைத்திருக்கும் ஊர்கள் இங்கு அதிகம்
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
19-ஜூலை-201907:46:20 IST Report Abuse
அம்பி ஐயர் சேவைக் கட்டணங்கள் ரத்து செய்யப்படவில்லை.... இன்னமும் அனைத்து வங்கிகளிலும் சேவைக் கட்டணங்கள் பிடித்தம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்....
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-ஜூலை-201908:37:28 IST Report Abuse
ஆரூர் ரங்தவறானது. என் குடும்பத்தினர் கணக்கு வைத்திருக்கும் மூன்று வங்கிகளிலும் RTGS NEFT இலவசமாகத்தான் உள்ளது...
Rate this:
Share this comment
rajan - Chennai,இந்தியா
19-ஜூலை-201913:25:02 IST Report Abuse
rajanIOB ல் சேவைக் கட்டணங்கள் ரத்து செய்யப்படவில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X