பொது செய்தி

இந்தியா

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement

புதுடில்லி: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்க வழிவகை செய்யும் சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.latest tamil newsகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்கும், 'போக்சோ' சட்டம், 2012ல் நிறைவேற்றப்பட்டது. இந்த குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதில் சட்ட திருத்தம் மேற்கொண்டு, தண்டனைகளை கடுமையாக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, போக்சோ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, ராஜ்யசபாவில் நேற்று(ஜூலை 18) தாக்கல் செய்தார்.


latest tamil newsஇதில், 16 வயதுக்கு குறைவான சிறுவர் - சிறுமியருக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கவும், அதை ஆயுள் தண்டனையாக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொடூரமான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கவும், குழந்தைகளை ஆபாச படம் எடுப்பவர்களுக்கு, ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும், இந்த மசோதா வழிவகை செய்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asagh busagh - Munich,ஜெர்மனி
19-ஜூலை-201912:52:27 IST Report Abuse
Asagh busagh அட பதுறுகளா ஏற்கனவே மரண தண்டனை சட்டத்தில கொடூர குற்றங்களுக்கு இருந்தும் குழந்தை பலாத்காரத்துக்கு மரண தண்டன கட்டாயம்னு செய்யுறதுல என்ன பயன்? இது அவசியம்னு விவாதிக்கும் போதே திரும்பி கிளம்பின இடத்துக்கே வந்து நிக்கிறானுவன்னு தெரியலையா? மரண தண்டனை நம்ம நாட்டுக்கு சரிவராதுன்னு புள்ளி விவரத்த பார்த்தாலே புரியலையா? இந்த லூசுதனத்த கேட்டு தலையில அடிச்சிக்க தான் தோணுது. தனிமை சிறையில சூரியனை பார்க்க முடியாம 20ஆண்டு வைச்சு, தாங்க முடியாத தனிமைய அப்படியே தாண்டினாலும், ஆஃண்டெர்ஸ் ரெஜிஸ்ட்டரில சேர்த்து அதுக்கு அப்புறம் அவன் வெளிய வந்தா அவனால வாழவே முடியாதபடி வேலை, இருக்க இடம் இல்லாத மாதிரி செய்யணும். மனித உரிமைய மறுக்கிறதவிட பெரிய தணடனையே கிடையாதுன்னு எப்ப தான் சட்ட வல்லுனர்களும், ஆட்சியாளர்களுக்கும் புரிய போவுது?
Rate this:
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூலை-201912:12:38 IST Report Abuse
RM laws are strict. but getting justice through steps like police,court will take years.A special court division in every state only to deal this to get speedy justice in time .Justice delayed is justice denied
Rate this:
Cancel
susainathan -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூலை-201911:38:31 IST Report Abuse
susainathan first give punishment for cine industry because they really encouraging to they showing more sex emotional content scenes in all u certificate movie also
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X