1.30 வரை அலெர்ட்! சட்டசபையில் தூங்கிய எடியூரப்பா

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (42)
Advertisement

பெங்களூரு: இன்று(ஜூலை 19) மதியம், 1:30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டதையடுத்து, எடியூரப்பா, உள்ளிட்ட பா.ஜ.,வினர் கர்நாடக சட்டசபையில் தூங்கி, இரவை கழித்தனர்.






கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 16 எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால், மாநிலத்தில் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. சபாநாயகர் அறிவித்தபடி, கர்நாடக சட்டசபை நேற்று(ஜூலை 18) முற்பகல் 11:15 மணிக்கு கூடியது. காங்கிரஸ், ம.ஜ.த.,வினரின் கூச்சல், குழப்பத்தால், நம்பிக்கை கோரும் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. நேற்று ஒரே நாளில், மூன்று முறை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. நாள் முழுவதும் ஆளுங்கூட்டணி கட்சியினருக்கும், பா.ஜ., உறுப்பினர்களுக்கும் இடையே கூச்சல், குழப்பம் நிலவிக் கொண்டே இருந்தது.






இன்று தெரியும்:

இதைத் தொடர்ந்து, இன்று மதியம் 1:30 மணிக்குள், சட்டசபையில் கூட்டணி அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் குமாரசாமிக்கு, கவர்னர் கடிதம் அனுப்பி நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார்.






சட்டசபையில் உறக்கம்:

நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படாததால், எதிர்க்கட்சி தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தலைமையில், பா.ஜ.,வினர் சட்டசபையில், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டுள்ளதால், சட்டசபையிலேயே தங்குவதற்கு பா.ஜ.,வினர் முடிவு செய்தனர்.




அவர்களுக்கு உணவு, படுக்கை விரிப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.,வினர், சட்டசபையிலேயே தூங்கினர். இன்று மதியம், 1:30 மணிக்கு, முதல்வர் குமாரசாமி 'கதி' தெரிந்து விடும்.




Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
23-ஜூலை-201903:40:09 IST Report Abuse
meenakshisundaram பிரதமராக இருக்கும் போது சபை நடக்கும் போதே தூங்கிய தேவா கவுடா வே முன்னணியில் உள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-ஜூலை-201914:24:56 IST Report Abuse
skv srinivasankrishnaveni போங்கடாபொங்குகளா எல்லாரும் பிராடுகளேதான் குமாரசாமியை சி எம் ஆக்கியது என்னாத்துக்கு கர்நாடகா நாசமாப்போறதுக்குத்தான் என்று அன்றே சொன்னேன் செய்ய செய்யும் பல மோசடிகளில் இதுவும் ஒன்னு போர்டஷு இப்போது யூபிலி அவப்பொண்ணு தைதைன்னு குதிச்சுண்டுருக்கா
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
19-ஜூலை-201914:26:20 IST Report Abuse
narayanan iyer நேற்று சட்டசபையில் உள்ளிருந்து போராட்டம் நடத்திய தவறுக்கு அவர்களை (பிஜேபி எம் எல் ஏ) பதவி நீக்கம் செய்தால் போதும் .
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
19-ஜூலை-201917:50:57 IST Report Abuse
Pannadai Pandianஎல்லோருக்கும் தெரியும்…..சும்மா நாடகம் போடாத…... நீ….....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X