ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்குவதா? அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (56)
Advertisement

வாஷிங்டன்: 'ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ரக ஏவுகணைகளை, இந்தியா உள்ளிட்ட எந்த நாடு வாங்கினாலும், அதை கடுமையாக எதிர்ப்போம்' என, அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.






ரஷ்யாவிடமிருந்து, 40 ஆயிரம் கோடி ரூபாயில், அதி நவீன, எஸ் - 400 ரக ஏவுகணைகளை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது; இதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து, இந்த ஏவுகணைகளை வாங்கும் நாடுகளுக்கு எதிராக, பொருளாதார தடை விதிக்கப் போவதாக, அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதையும் மீறி, ஏவுகணைகளை வாங்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவ கொள்கைகளுக்கான இணை செயலர், டேவிட் டிராச்டென்பெர்க், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராணுவ ரீதியிலான விஷயங்களில், இந்தியாவுடனான எங்கள் உறவு, மிகவும் பலமாக உள்ளது. இந்த உறவு, முன் எப்போதும் இல்லாத வகையில், இப்போது தான் மிகவும் பலமானதாக உள்ளது. அதே நேரத்தில், ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை மற்றும் ஆயுதங்களை, இந்தியா உட்பட, எந்த நாடு வாங்கினாலும், அதை, அமெரிக்கா கடுமையாக எதிர்க்கும்.





எங்களின் நவீன தயாரிப்பு போர் விமானங்களுக்கு சவால் விடும் வகையில், எஸ் - 400 ரக ஏவுகணைகளை ரஷ்யா தயாரித்துள்ளது. ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கும் மசோதா, ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கும் முடிவை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கைவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Coimbatore,இந்தியா
19-ஜூலை-201917:54:27 IST Report Abuse
Rajan . விண்ணுக்கும் மண்ணுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். விவசாயம் பற்றி எப்படி பேசமுடியும். அவர்கள் தலைவர் காட்டும் பாதை .. Just Ignore
Rate this:
Share this comment
Cancel
sankar - london,யுனைடெட் கிங்டம்
19-ஜூலை-201913:59:59 IST Report Abuse
sankar அமெரிக்கா தொடை நடுங்குது என்றால் அது நமக்கு முக்கிய தேவையாகவே இருக்கும்.. விமானங்களை விட மிக முக்கியமானது S 400 பீரங்கி... காரணம் விண்வெளியில் இருந்து ஒரு உதை பந்து அளவில் உள்ள பொருள் தெரிந்தாலும் இனம் கண்டு சுடும் திறன் கொண்டது.... அதிலும் அரத பழசான F 16 விடவும் ... விலையுயர்ந்த " மகா " மட்டமான F35 விடவும் மிக அவசியமானது S 400 ....
Rate this:
Share this comment
Cancel
Rajan - Coimbatore,இந்தியா
19-ஜூலை-201913:33:39 IST Report Abuse
Rajan கிஸ்க்கு ...கிஸ்க்கு .... இது எல்லாம் எங்கள் நமோ சிவாய விடம் நடக்காது அமெரிக்கா. இவர்..அவர் அல்ல ஜாக்கிரதை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X