பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீடிக்கும்...அடுத்து 2 நாளைக்கும்...

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.





சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.




சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 10 செ.மீ., வால்பாறை, கடலூரில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும், மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinathan S - chennai,இந்தியா
19-ஜூலை-201919:22:34 IST Report Abuse
Gopinathan S """"சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்"""""இந்த தேஞ்சு போன வசனத்தை மாத்துங்கப்பா.....
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
19-ஜூலை-201914:31:21 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam "எல்லாம் வல்லவன், எல்லாம் தெரிந்தவன், எங்கும் நிறைந்தவன்" இத்தகைய இயல்புகளைக் கொண்டவனின் அருள் இருக்கும் வரை, தமிழகம் தமிழகமாகவே நிலைக்கும். யார் இந்த இயல்புக்குரியவன் ? வேறு யாருமில்லை, அந்தத் தில்லைக்கூத்தனே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X